பெங்களூரில் கன்னட அமைப்பினரால் தமிழ் பேனர்கள் கிழிப்பு!

பெங்களூரில் கன்னட அமைப்பினரால் தமிழ் பேனர்கள் கிழிப்பு!

பெங்களூரில் கன்னட அமைப்பினரால் தமிழ் பேனர்கள் கிழிப்பு!

பெங்களூரில், தமிழில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை கன்னட அமைப்பினர் கிழித்து எறிந்ததால், அந்தப் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. ஆடி கிருத்திகை மற்றும் சுதந்திர தினத்தையொட்டி பெங்களூரில் உள்ள புலகேஷி நகரில், தமிழில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அந்த பேனர்களை இன்று காலை கர்நாடகா ரக் ஷண வேதிக் உறுப்பினர்கள் சிலர் கிழித்து எறிந்தனர். இதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


நேற்று சுதந்திர தின விழாவில் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா ‘கர்நாடகாவில் கன்னட மொழிதான் முதன்மையானது. கர்நாடகாவில் கன்னட மொழிக்கு எதிரான அடக்கு முறையை சகித்துக் கொள்ள முடியாது’ என்று கன்னட மொழி குறித்துப் பேசினார். இந்நிலையில் பெங்களூரில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. கர்நாடகா ரக் ஷண வேதிக் உறுப்பினர்கள் தமிழ் பேனர்களை கிழித்ததன் நோக்கம் என்ன என்பது இன்னும் வெளியாகவில்லை.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>