“ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்புகள் சமரசம் செய்யப்பட்டுள்ளன” – ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் ராஜினாமா!

“ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்புகள் சமரசம் செய்யப்பட்டுள்ளன” – ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் ராஜினாமா!

தமிழகத்தை பூர்விகமாக கொண்ட ஐஏஸ் அதிகாரி எஸ்.சசிகாந்த் செந்தில், கர்நாடக மாநிலத்திலுள்ள தக்‌ஷின கன்னடா மாவட்டத்தின் துணை ஆணையர், பதவியை இன்று (வெள்ளிக்கிழமை) ராஜிநாமா செய்துள்ளார்.

ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில்!

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த தருணத்தில் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்த ராஜிநாமா முடிவு நான் சுயமாக எடுத்தது. நான் தற்போது வகித்து வரும் துணை ஆணையர் பதவிக்கு தொடர்பில் நான் பதவியை ராஜிநாமா செய்யவில்லை, எனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பிலிருந்து பாதியில் விலகியதற்காக தக்‌ஷின கன்னடா மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இம்மாவட்ட மக்கள் மிகவும் அன்புடனும், கனிவுடனும் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்பு சமரசம் செய்யப்பட்டுள்ளதால், மேற்கொண்டு இந்த பதவியில் தான் தொடர்வது நெறியற்றது என்று குறிப்பிட்டுள்ள சசிகாந்த், இனி வரக்கூடிய காலங்களில் நாட்டின் அடிப்படை கட்டமைப்புகள் மிகக் கடினமான ஒரு சூழலை எதிர்கொள்ளும் என்பதை தான் தீர்க்கமாக நம்புவதாகவும், அதனால் ஐஏஎஸ் பணியைவிட்டு விலகி வெளியிலிருந்து மக்களின் நலனுக்காக உழைக்க காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

40 வயதாகும் சசிகாந்த் செந்தில், தமிழ்நாட்டின் திருச்சியை பூர்விகமாக கொண்டவர். 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் தக்‌ஷின கன்னடா மாவட்டத்தின் துணை ஆணையராக பதவியேற்று கொண்டார். அவர் திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினியரிங் கல்லூரியில் படித்தவர். 2009 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வான அவர், 2009லிருந்து 2012 ஆம் ஆண்டு வரை பெல்லாரியில் துணை ஆணையராக இருந்துள்ளார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>