கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த பெங்களூரு இன்டியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் இரண்டாவது இடத்தையும், மூன்றாவது இடத்தை டெல்லி ஐ.ஐ.டி நிறுவனமும் பிடித்துள்ளன. பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் 7 இடங்களை ஐ.ஐ.டி நிறுவனங்களே பெற்றுள்ளன. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் 7 – வது இடத்தையும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் 10-வது இடத்தையும் பெற்றுள்ளன.
நாட்டிலேயே சிறந்த இன்ஜினீயரிங் கல்வி நிறுவனங்களில், ஐ.ஐ.டி மெட்ராஸ் முதலிடத்தைப் பிடித்துள்ளது. டெல்லி , மும்பை ஐ.ஐ.டி நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு 4- வது இடம். திருச்சி நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி 9-வது இடத்தைப் பெற்றுள்ளது.
சிறந்த கல்லூரிகள் பட்டியலில், டெல்லி பல்கலைக்கழகத்தின் மிராண்டா ஹவுஸ், நாட்டிலேயே முதலிடத்தைப் பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில் சென்னை பிரெசிடென்ஸி கல்லூரிக்கு மூன்றாவது இடம். டெல்லி ஸ்டீபன்ஸ் கல்லூரிக்கு 4-வது இடம்.
மேலாண்மை கல்வி நிறுவனங்களில், பெங்களூரு ஐ.ஐ.எம் நிறுவனம் முதலிடத்தைப் பெற்றுள்ளது. பார்மஸி கல்லூரிகள் வரிசையில் ஜாமியா ஹாம்டர்ட் முதலிடத்தைப் பிடித்துள்ளது. டெல்லி ஆல் இந்தியா மெடிக்கல் சயின்ஸ் நிறுவனம், மருத்துவக் கல்வியில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. சட்டக் கல்லூரிகள் வரிசையில் பெங்களூரு சட்டக் கல்லூரிக்கு முதலிடம்.
கடந்த 2016-ம் ஆண்டு முதல் மத்திய மனிதவளத் துறை அமைச்சகம் இந்தப் பட்டியலை வெளியிட்டுவருகிறது. நாட்டில் உள்ள 3,127 கல்வி நிறுவனங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. கற்பிக்கும் முறை, ஆராய்ச்சி முறை, உள் கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்கள் திறமை, தொழில்முறை அனுபவங்கள் பெறுவது உள்ளிட்ட ஏராளமான காரணிகளைக் கருத்தில்கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.