டெல்லி சக்கூர்பூர் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு திருவள்ளுவர் பெயர் சூட்ட வேண்டும்: டெல்லிவாழ் தமிழர்கள் கோரிக்கை!

டெல்லி சக்கூர்பூர் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு திருவள்ளுவர் பெயர் சூட்ட வேண்டும்: டெல்லிவாழ் தமிழர்கள் கோரிக்கை!

டெல்லி சக்கூர்பூர் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு திருவள்ளுவர் பெயர் சூட்ட வேண்டும்: டெல்லிவாழ் தமிழர்கள் கோரிக்கை!

மேற்கு டெல்லியில் உள்ள சக்கூர்பூர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு திருவள்ளுவர் பெயர் சூட்ட வேண்டும் என டெல்லிவாழ் தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்துக்கு அவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

கடந்த 1975-ல் டெல்லி அரசு சார்பில் ஆர்.கே.புரம், மேற்கு பிளாக் பகுதியில் ஒரு பூங்கா அமைக்கப்பட்டு அதில் வள்ளுவர் சிலை வைக்கப்பட்டது. பிறகு பராமரிப்புக் குறைவு காரணமாக 2010-ல் எதிரில் உள்ள டெல்லி தமிழ் சங்க கட்டிடம் முன்பாக வள்ளுவர் சிலை இடமாற்றம் செய்யப்பட்டது. சுமார் 25 வருடங்களுக்கு முன் டெல்லி மாநகராட்சி சார்பில் சக்கூர்பூர் காலனியின் சாலைக்கும் ‘திருவள்ளுவர் மார்க்’ எனப் பெயரிடப்பட்டது.

இந்நிலையில், சக்கூர்பூர் வழியாக புதிதாக ரோஸ் நிற மெட்ரோ ரயில்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சக்கூர்பூர் மெட்ரோ நிலையத்திற்கும் ‘திருவள்ளுவர் மெட்ரோ நிலையம்’ எனப் பெயரிட கோரிக்கை எழுந்துள்ளது

இதுகுறித்து டெல்லியின் தமிழக இளைஞர் கலாச்சார அமைப்பின் பொதுச் செயலாளர் கூறும்போது, “சக்கூர்பூர் பகுதியில் தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர். இதனால் அதன் மெட்ரோ நிலையத்திற்கு திருவள்ளுவர் பெயர் சூட்ட வேண்டும் என டெல்லியின் அனைத்து தமிழர்களும் விரும்புகின்றனர். இது தொடர்பாக எங்கள் அமைப்பு சார்பில் தீர்மானம் நிறைவேற்றி சம்பந்தபட்டவர்களுக்கு அனுப்பி வருகிறோம்” என்றார்.

டெல்லியில் உள்ள வைகை தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உள்ளுரை ஆணையர்களான ஜஸ்பீர்சிங் பஜாஜ், ந.முருகானந்தம் ஆகியோரிடமும் தீர்மான நகலை அளித்து அரசிடம் வலியுறுத்தும்படி கோரியுள்ளனர். மேலும் பிரதமர் உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்களிடம் வலியுறுத்தும்படி ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகியோருக்கும் கடிதம் எழுதியுள்ளனர்.

  • தி இந்து
Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: