தேசிய அளவிலான ஜூனியர் எறிபந்து சாம்பியன்ஷிப் போட்டியில், கர்நாடக பெண்கள் அணியை வீழ்த்தி, தமிழக பெண்கள் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
கர்நாடக மாநிலம் மாண்டியாவில், தேசிய அளவிலான, 28வது ஜூனியர் எறிபந்து சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. நாடு முழுவதும் இருந்து, பல்வேறு அணிகள் பங்கேற்றன. இதில், மகளிர் பிரிவு இறுதி போட்டியில், தமிழக பெண்கள் அணியும், கர்நாடக பெண்கள் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
தமிழக அணி அபாரமாக விளையாடி, முதல் ஆட்டத்தை, 15 – 5 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது. இரண்டாவது ஆட்டத்தில், கர்நாடக அணி மீண்டும் படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்த, தமிழக அணி, 15 – 4 என்ற கணக்கில் ஜெயித்தது.
தமிழக பெண்கள் அணி, 2 – ௦ என்ற கணக்கில், கர்நாடக அணியை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. தமிழக அணிக்கு, கோப்பை பரிசாக வழங்கப்பட்டது. வீராங்கனைகளுக்கு பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
ஆடவர் பிரிவு இறுதி போட்டியில், டெல்லி ஆண்கள் அணி, மத்திய பிரதேச ஆண்கள் அணியை வென்றது. மூன்றாவது இடத்திற்கான போட்டியில், தமிழக ஆண்கள் அணி, 15 – 7, 15 – 13 என, கர்நாடக ஆண்கள் அணியை தோற்கடித்து, வெண்கல பதக்கத்தை வென்றது.