தமிழ் அரசர்கள் கட்டிய அணை உள்ளது. ஆனால், அவர்கள் வாழ்ந்த அரண்மனை மற்றும் நகரும் காணாமல் போனது – எப்படி வந்தார்கள் எங்கே போனார்கள், கேள்வியை எழுப்பியுள்ளார் திரு. அமுதன்!

தமிழ் அரசர்கள் கட்டிய அணை உள்ளது. ஆனால், அவர்கள் வாழ்ந்த அரண்மனை மற்றும் நகரும் காணாமல் போனது - எப்படி வந்தார்கள் எங்கே போனார்கள் என்ற அருமையான கேள்வியை எழுப்பியுள்ளார் திரு. அமுதன், கட்டுரை ஆசிரியர்

தமிழ் அரசர்கள் கட்டிய அணை உள்ளது. ஆனால், அவர்கள் வாழ்ந்த அரண்மனை மற்றும் நகரும் காணாமல் போனது – எப்படி வந்தார்கள் எங்கே போனார்கள் என்ற அருமையான கேள்வியை எழுப்பியுள்ளார் திரு. அமுதன், கட்டுரை ஆசிரியர்

எப்படி வந்தார்கள் எங்கே போனார்கள் என்ற அருமையான கேள்வியை எழுப்பியுள்ளார் திரு. அமுதன், கட்டுரை ஆசிரியர். உண்மையில் தமிழர்கள் சிந்திக்க வேண்டியது.

கரிகாற்சோழன் கட்டிய அணை உள்ளது. ஆனால், அவன் வாழ்ந்த அரண்மனை மற்றும் நகரும் காணாமல் போனது. ராஜராஜ சோழன் கட்டிய கோவில் உள்ளது ஆனால் அவன் கட்டிய வாழ்ந்த அரண்மனையும் பிற கட்டடங்களும் இல்லை. ராஜேந்திர சோழன் கட்டிய கோவில் மட்டுமே உள்ளது ஆனால் அவன் வாழ்ந்த இடங்கள் இல்லை. சோழர்கள் உருவாக்கிய நகரமும் இல்லை. எப்படி இந்த அடையாளங்கள் சுவடே இல்லாமல் காணாமல் போனது என்பது பெரும் கேள்வி.

திராவிடர்கள் தமிழகத்தை கைப்பற்றிய பிறகு தமிழர் அடையாளங்கள் மறைக்கப்பட்டதா? திருமலை நாயக்கர் கட்டிய நாயக்க மகால் மட்டுமே இன்று வரை நிலைத்து நிற்கிறது. திருமலை வழிவந்த திராவிடர்கள் தமிழர் வரலாற்றை முற்றிலும் அழித்து விட்டார்களா? திராவிடர் வழிவந்த ராமசாமி நாயக்கர் கூட தமிழர் மெய்யியலை மட்டுமே அழித்தார், தமிழர் கட்டடங்களை அழிக்கவில்லை. ஆனால் திராவிட ஆட்சியில் பல தமிழர் அடையாளங்கள் சிதைக்கப்பட்டுள்ளது என்பதை நாம் மறுக்க இயலாது. தமிழர் வரலாற்றை, அடையாளங்களை மீட்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.


பழங்கால வரலாறு அனைத்துமே ஏதோ ஒரு வகையில் கிடைக்கும் ஒரு சில அடையாளங்களை வைத்து, அதன் மூலம் அனுமானமாக சம்பவங்களைக் கோர்வைப்படுத்தி கூறப்படும் தகவலாகவே இருக்கிறது.

அந்த தகவல்களை அப்படியே ஏற்றுக்கொள்வதற்கு ஒரு கட்சியும், மறுத்துக் கூறுவதற்கு ஒரு பிரிவினரும் எப்போதும் இருப்பார்கள்.

இந்த நிலைமைக்குக் காரணம், அந்த வரலாறு பற்றிய ஆதாரபூர்வமான ஆவணங்கள் ஏதும் இல்லாததே.

நாம் வாழும் பூமியும் மற்றும் சூரியன், சந்திரன் உள்பட அனைத்து கோள்களும் ஆதியில் எவ்வாறு தோன்றின? பூமியில் தண்ணீரும் காற்று மண்டலமும் உருவானது எப்படி? அதில் உயிர் இனங்கள் படிப்படியாக வளர்ச்சி அடைந்தது எவ்வாறு? என்பது பற்றி பலவிதமான கருத்துக்கள் உள்ளன.

ஒவ்வொருவரும் தாங்கள் கூறும் கருத்துக்கு அடிப்படைக் காரணமாக ஏதாவது ஒன்றை சொல்வார்கள்.

ஆனால் அவற்றை எல்லாம் அறுதியிட்டு நிரூபிக்க முடியாது.

கோடிக்கணக்கான ஆண்டுகள் உருண்டோடி விட்டதால், அவற்றுக்கான ஆதாரங்களை தேடிச்செல்ல முடியாத தொலைவுக்கு நாம் வந்துவிட்டோம்.

இதனால் பிரபஞ்சத்தில் கோள்கள் உருவானது முதல், மனித இனம் தோன்றி சில நூற்றாண்டுகளுக்கு முன் பெற்ற வளர்ச்சி வரை உள்ள வரலாறு பற்றி பெரும்பாலானவர்கள் சொல்லும் கருத்தை நாம் ஓரளவு ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை.

தமிழகம் உள்பட இந்திய அளவிலும் மற்றும் அனைத்து நாடுகளிலும் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு இன்றளவும் காணப்படும் பிரமாண்ட அமைப்புகளும், அந்தக் காலத்தில் இயற்றப்பட்ட இலக்கியங்களும் மட்டுமே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் உள்ள வரலாற்றை ஓரளவு ஆதாரத்துடன் நிரூபிப்பதாக உள்ளன.

எடுத்துக்காட்டாக, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட திருக்குறளை எடுத்துக் கொள்ளலாம்.

திருக்குறள் நமக்கு முழுமையாகக் கிடைத்து இருப்பதால், அதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்பது மட்டுமே உறுதியாகத் தெரிகிறது.

ஆனால், திருவள்ளுவரைப் பற்றிய முழுமையான வரலாறு என்பது உறுதியான ஆதாரபூர்வமான தகவலாகக் கிடைக்கவில்லை. அதற்கு உரிய ஆவணங்கள் ஏதும் நம்மிடையே இல்லை.

இதன் காரணமாக திருவள்ளுவரின் வரலாறு என்று அனுமானமாகக் கூறப்படுவதை மட்டுமே ஏற்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தின் நிலைமையே இப்படி என்றால், பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற வரலாற்று சம்பவங்களை ஆதாரபூர்வமாக சொல்வது என்பது இயலாத செயல்.

ஆதிச்சநல்லூரில் நடைபெற்ற தொல்பொருள் ஆய்வு போல உலகின் பல இடங்களிலும் நடைபெறும் ஆய்வுகள் மூலம் கிடைக்கும் பழங்கால கருவிகள் மற்றும் மண்பாண்டங்களை பரிசோதனைக்கு உட்படுத்தி, சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் இப்படித்தான் வாழ்ந்து இருப்பார்கள் என்பதை ஓரளவு தெரிந்து கொள்ள முடிகிறது.

அதற்கும் முன் உள்ள காலகட்டத்தின் வரலாறு பற்றிக் கூறுவதற்கு ஆதாரம் கிடைப்பது அரிது.

பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதன் உலகின் எந்தப் பகுதியில் முதன் முதலில் தோன்றினான், பின்னர் மனித நாகரிகம் மற்ற இடங்களுக்கு எவ்வாறு பரவியது என்பது உள்பட கடந்த காலத்தின் திட்டவட்டமான வரலாறு உறுதியாக நிரூபிக்கப்படாமலேயே இருக்கிறது.

ஆப்பிரிக்கா தான் மனிதன் முதலில் தோன்றிய பகுதி என்பதும், பின்னர் அங்கு இருந்து மனிதர்கள் உலகின் பல பகுதிகளுக்கும் பரவினார்கள் என்பதும் ஒரு சிலரின் கோட்பாடு.

பூமியில் தனித்தனியாக 7 கண்டங்கள் இப்போது இருப்பதுபோல அல்லாமல், பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நிலப்பரப்பாக இருந்தது என்றும் தற்போதைய இந்தியாவின் தென் பகுதி பெரிய நிலப்பரப்பாக இருந்தது என்றும் அந்த கண்டத்தின் பெயர் ‘லெமூரியா’ என்றும் சிலர் உறுதிபடக் கூறுகிறார்கள்.

விஞ்ஞானம் மேலும் வளர்ச்சி அடைந்து, அதன் மூலம் கடந்த காலத்தைத் தேடிச் செல்ல வழி ஏதும் கிடைக்கும்போது இதுபோன்ற கருத்துகளுக்கு ஆதாரபூர்வமான முழுமையான விளக்கம் தெரியவரலாம்.

அதற்கு இடையே, இப்போது உள்ள அறிவியல் அறிவு கொண்டு மனித வரலாற்றை ஓரளவு ஆதாரத்துடன் கூறு வதற்கான முயற்சியாக தொல்பொருள் ஆய்வுகளும், கடலுக்கு அடியில் நடைபெறும் ஆராய்ச்சிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.

உலகின் பல பகுதிகளிலும் வசிக்கும் மனிதர்களின் மரபணுவை சோதித்துப் பார்த்து, அதன் அடிப்படையில் இப்போது ஒவ்வொரு பகுதியிலும் வசிக்கும் மனிதர்களின் முன்னோர் அந்தக் காலத்தில் எங்கே வசித்து இருந்து இருப்பார்கள் என்ற தேடலும் நடைபெறுகின்றது.

இத்தகைய ஆய்வுகளின் முடிவைக் கொண்டு, கடந்த கால மனித வரலாறு எப்படி இருந்து இருக்கும் என்பது ஓரளவு உறுதியாகக் கூறப்படுகிறது.

அந்த வகையில், தமிழர்களின் மரபணுவும், மத்திய தரைக்கடல் பகுதி மக்களின் மரபணுவும், ஓரளவு ஒத்துப்போகிறது என்கிறார்கள்.

இத்தகைய ஆய்வுக்கு ஆதிச்சநல்லூரில் கிடைத்த பழங்கால மனிதர்களின் மண்டை ஓடுகள் பெரும் அளவில் உதவியாக இருக்கின்றன.

பல லட்சம் ஆண்டுகளுக்கு முன், மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து தமிழகம் வரை உள்ள நிலப்பகுதி கடலால் பிரிக்கப்படாமல் ஒரே இடமாக இருந்து இருக்க வேண்டும் என்றும், அது தான் லெமூரியா கண்டம் என்றும், அங்கு வசித்தவர்கள் எல்லாம் ஒரே இனமாக கருதுவதற்கு அறிவியல் ரீதியான அடிப்படை இருக்கிறது என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது தமிழர்கள் என்ற இனம், வேறு எங்கும் இருந்து இங்கே வந்த இனம் அல்ல, அந்த இனத்தின் பூர்வீகமே தமிழகம் தான் என்று உறுதியாகக் கருதப்படுகிறது.

ஆதிச்சநல்லூர் நாகரிக மக்கள் இந்தியாவின் வட பகுதியில் இருந்தோ அல்லது வேறு எங்கும் இருந்தோ தமிழகத்துக்கு குடி வந்தவர்கள் அல்ல; அவர்களது பூர்வீகமே தமிழகம் தான் என்று பல அறிஞர்களின் நூல்களில் திட்டவட்டமாகக் கூறப்பட்டு இருக்கிறது.

ஆதி காலத்தில் இருந்து தமிழகத்தில் ஆங்காங்கே வசித்தவர்களில் ஒரு பகுதியினர் வளமையான வாழ்விடம் தேடி, தாமிரபரணி ஆற்றங்கரையைத் தேர்ந்தெடுத்து அங்கே குடியேறி இருக்கலாம்; அவர்கள் தான் ஆதிச்சநல்லூர் நாகரிக மக்கள் என்பது பெரும்பாலானவர்களின் கணிப்பாக இருக்கிறது.

அவ்வாறு தாமிரபரணி ஆற்றங்கரைக்கு வந்த ஆதிச்சநல்லூர் நாகரிகத்துக்கு உரியவர்கள் பயன்படுத்திய மயான பூமி மட்டும் இப்போது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறதே தவிர, அவர்கள் எந்த இடத்தில் தங்கள் நகரை அமைத்து இருந்தார்கள்? அங்கே எத்தனை ஆண்டுகள் செழிப்பாக வாழ்க்கை நடத்தினார்கள்? என்பதற்கான ஆதாரம் ஏதும் இதுவரைசிக்கவில்லை.

அதேபோல, அந்த நாகரிக மக்கள், இருந்த இடம் தெரியாமல் ஒட்டுமொத்தமாக எப்படி மறைந்தார்கள் என்பதற்கும் விடை இல்லை.

சுவடே இல்லாமல் அவர்கள் மறைந்து போனதற்குக் காரணம் இயற்கையால் ஏற்பட்ட பேரழிவா? அல்லது அவர்கள் மாயமானதற்கு வேறு ஏதும் காரணமாக அமைந்து இருந்ததா? என்பது இன்னும் ஆராயப்படாமலேயே இருக்கிறது.

ஓர் இடத்தில் வாழ்ந்தவர்கள் எந்தவித சுவடும் இல்லாமல் மறைந்து போக பலவிதமான வாய்ப்புகள் உள்ளன என்பதற்கு சமீபகால வரலாறே சாட்சியாக இருக்கிறது.

1000 ஆண்டுகளுக்கு முன் மிக்க புகழுடன் வாழ்ந்த மாமன்னர் ராஜராஜன், தஞ்சையில் மிகப் பிரமாண்டமான கோவிலைக் கட்டினார். அந்தக் கோவில் இன்றளவும் சிறிய சேதாரமும் இன்றி கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது.

ஆனால், அவர் வாழ்ந்த அரண்மனை மற்றும் அப்போது இருந்த மாட மாளிகைகள் எல்லாம் இருந்த இடமே தெரியாமல் போய்விட்டன.

அதேபோல அவரது மகன் மன்னர் ராஜேந்திரன் கட்டிய கங்கைகொண்ட சோழபுரம் கோவில் மட்டுமே இப்போது எஞ்சி இருக்கிறது. அவர் மிகத் திட்டமிட்டு உருவாக்கிய நகரின் சுவடே இல்லாமல் அந்தப் பெரிய நகரம் மண்ணோடு மண்ணாகிப் போய்விட்டது.

காவிரி ஆற்றின் குறுக்கே சோழ மன்னர் கரிகாலன் கட்டிய கல்லணை இன்னும் பயன்பாட்டில் இருக்கிறது. ஆனால் அந்த மன்னர் வாழ்ந்த இடமோ, அவர் இருந்து அரசாட்சி செய்த இடமோ கண்டுபிடிக்கப்படவில்லை.

ஆனால், மன்னர்கள் ராஜராஜனும், ராஜேந்திரனும் தாங்கள் கட்டிய கோவில்களில் வரலாற்றுத் தகவல்களை ஆவணமாகக் கல்வெட்டாக செதுக்கி வைத்து இருந்ததால், அவர்களது காலத்தில் நடந்தவற்றை இப்போது நாம் தெரிந்துகொள்ள முடிகிறது.

அவை மட்டும் இல்லை என்றால், தஞ்சையில் சோழர் களின் மகோன்னதமான ஆட்சி நடைபெற்றது என்பதற்கு ஆதாரமே இல்லாமல் போய் இருக்கும்.

எது எப்படி இருந்தபோதிலும், ஆவணமாக ஏதும் பதிவு செய்யப்படாத நிலையில், வருங்காலத்தில் வரலாறை அறிந்துகொள்வதில் சிரமம் இருக்கும் என்பதாலேயே இப்போது அனைத்தும் ஆவணமாக ஆக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், ஆதிச்சநல்லூர் வரலாறு இன்னும் முழுமையாக ஆவணப்படுத்தப்படாமல் இருப்பது பெரிய துரதிருஷ்டம்.

பழங்காலத்தில் கடந்தகால வரலாறு ஆவணப்படுத்தப்படாததால், அவை எல்லாம் விடை தெரியாத ரகசியங்களாக எப்படி நீடிக்கின்றன என்பதை அடுத்த வாரம் பார்க்கலாம்.

– நன்றி : தினத்தந்தி

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: