​தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தினம் இன்று!

தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தினம் இன்று!

தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தினம் இன்று!

தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தினமான இன்று கொண்டாடப்படுகிறது.

ஒரு மொழி செம்மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென்றால் அதன் இலக்கிய வளங்கள் செழுமை மிகுந்ததாக இருக்க வேண்டும். அது மற்ற மொழிகளை சாராததாக இருக்க வேண்டும். தனித்து இயங்கும் ஆற்றல் அந்த மொழிகளுக்கு இருக்க வேண்டும். இந்த வரையறைகளைப் பூர்த்தி செய்யும் மொழிகள் செம்மொழிகளாக விளங்கும். உலகின் பழமையான செம்மொழிகளாக, தமிழ், சமஸ்கிருதம், ஹீப்ரு, கிரேக்கம், லத்தீன், சீனம் ஆகிய ஆறு மொழிகள் அறியப்படுகின்றன.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?


ஆனால் இந்திய ஒன்றிய அரசு தமிழை செம்மொழியாக கடந்த 2004ம் ஆண்டு தான் அறிவித்தது. அந்த ஆண்டு நடந்த நாடாளுமனறத் தேர்தல் அறிக்கையில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்படுவதற்கு தேவையான முயற்சிகளை எடுப்போம் என திமுக அறிவித்தது. அதன் படி தேர்தலுக்குப் பின்னர் காங்கிரஸ் தலைமையிலான அமைச்சரவை அமைந்த போது அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன.

இந்தியாவில் ஒரு மொழி செம்மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென்றால் அந்த மொழி ஆயிரம் ஆண்டு பழமையானதாக இருக்க வேண்டும். அந்த மொழியின் தொடக்ககால இலக்கியங்கள் சிறந்ததாக இருக்க வேண்டும் என்ற வரையறைகள் உண்டு. அதன் அடிப்படையில் 2004ம் ஆண்டு ஜூன் 6 அன்று தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. இந்திய அரசால் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட முதல் மொழி தமிழ் தான்.

ஆனால் அப்போது தமிழ் மொழி ஆயிரம் ஆண்டு பழமையானது எனக் கூறி செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி என பெருமையாகக் குறிக்கப்படும் தமிழினத்தின் மொழியை ஆயிரம் ஆண்டு பழமையானது என்று கூறியது அதன் தொன்மையைக் குறைக்கும் முயற்சி என விமர்சிக்கப்பட்டது.

இந்திய அரசின் வரையறைக்காக தமிழின் தொன்மை குறைத்துக் காட்டப்பட்டாலும் தமிழ் மொழியின் இலக்கியங்களும், தமிழர்களும் அதன் பெருமையை என்றும் காப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: