தமிழீழ விடுதலைப் புலிகளின் அசுர வளர்ச்சிக்குக் காரணம் நஞ்சுக் குப்பி (சயனைடு) என்றால் மிகையாகாது. எதிரிகளிடம் உயிருடன் பிடிபடாமல் நஞ்சுக் குப்பியை கடித்து வீரச் சாவடைவதன் மூலம் இயக்கத்தைச் சிதைவுறாமல் பாதுகாக்கும் முறையை விடுதலைப் புலிகள் கையாண்டனர். இதனை கோழைத்தனம் என்று தொடக்கத்தில் விமர்சித்தவர்கள் உண்டு. பிற்காலத்தில் புலிகள் இயக்கத்தின் வீறுகண்ட எழுச்சிக்கு குப்பி கடித்தலும் ஒரு காரணம் என்பதை உணர்ந்தனர். அதனை வீரச்சாவாக ஏற்றுப் போற்றினர். குப்பி கடித்தலுக்கு முதல் வழி காட்டயது யாரென்று தெரியுமா? அவன் பெயர் பொன்.சிவக்குமாரன்.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
இவனொரு கல்லூரி மாணவன். 1974இல் யாழ்ப்பாணத்தில் உலகத்தமிழ் ஆராய்சி மாநாடு நடைபெற்றது. சிங்கள காவல்துறை மாநாட்டை சீர்குலைக்கும் வகையில் 9 தமிழர்களை சுட்டுக் கொன்றது. இதில் ஈடுபட்டவர்களுக்கு தக்க பாடம் புகட்ட நினைத்தான் சிவக்குமாரன். அப்போது யாழ்ப்பாணம் உரும்பிராய் காவல் துறையினர் அவனை சுற்றி வளைத்த போது நஞ்சருந்தி வீரச் சாவைத் தழுவினான்.
1970 களில் கல்வித் துறையில் தரப்படுத்துதல் திட்டம் சிங்கள அரசால் கொண்டுவரப்பட்டது. சிங்கள மாணவர்கள் 229 மதிப்பெண்களும், தமிழ் மாணவர்கள் 250 மதிப்பெண்களும் எடுத்தால் தான் பல்கலைக் கழகத்தில் நுழைய முடியும். அதனை எதிர்த்து தமிழ் மாணவர்கள் போர்க் கோலம் பூண்டனர். அவர்களுக்கென்று தமிழ் மாணவர் பேரவை தொடங்கப்பட்டது. பொன். சிவக்குமாரன் அதில் தன்னை இணைத்துக் கொண்டு மாணவர்களை அணி திரட்டினான்.
சிங்கள அரசு சட்ட வழி முறைப் போராட்டங்களை அலட்சியம் காட்டத் தொடங்கியது. தமிழீழ விடுதலைக்கு ஆயுதப் போராட்டமே தீர்வு என்று பொன். சிவக்குமாரன் முடிவுக்கு வந்தான். தமிழரசுக் கட்சி நடத்திய தந்தை செல்வா இவரின் முயற்சிக்கு துணை நின்றார். கல்வி அமைச்சர் சந்திர சேகரா, யாழ் மேயர் ஆல்பிரட் துரையப்பா கார்களுக்கு குண்டு வைத்து வெடிக்கத் செய்தான். இதில் இருவருமே உயிர் தப்பினர். வெடிகுண்டு தயாரித்து வெடிக்கச் செய்தவன் பொன். சிவக்குமாரன் என்பதை கண்டறிந்த காவல் துறை அவனை கைது செய்து கடும் சித்திரவதை செய்தது. மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை பெற்றான்.
பின்னர் வெளியே வந்த பொன். சிவக்குமாரன் சித்திரவதைகளிலிருந்தும், எதிரிகளிடமிருந்தும் தப்பிக்கும் வழிமுறையை கண்டறிந்தான். நஞ்சருந்தி உயிர் ஈகம் செய்வதன் மூலம் ஈழ விடுதலையை முன் நகர்த்த முடியுமென்று நம்பினான்… நஞ்சருந்தினான்… உயிர் ஈகம் செய்தான்… அவனுக்கு அப்போது வயது 25. அன்று தமிழ் மாணவர் பேரவையில் தன்னை பிணைத்துக் கொண்டிருந்த தம்பி பிரபாகரன் தனியாக இயக்கம் கண்ட பின்னர் பொன். சிவக்குமாரன் வழியை பின்பற்றி கழுத்தில் நஞ்சு குப்பி அணிவதை கட்டாயமாக்கினார்.