”அரச பரம்பரையை அறிய உதவும் முக்கிய ஆவணமாக, செப்பேடுகள் உள்ளன, ”என பேராசிரியர் சங்கர நாராயணன் பேசினார். தமிழக தொல்லியல் துறையின் சார்பில், மாதந்தோறும் சொற்பொழிவுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த மாத சொற்பொழிவு, தமிழ் வளர்ச்சித் துறை அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?
இதில், காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்துாரில் உள்ள, சந்திர சேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகா வித்யாலயாவின் சமஸ்கிருத பேராசிரியர், சங்கர நாராயணன் பங்கேற்று பேசியதாவது: நம் நாட்டில், 2,300 ஆண்டுகளுக்கு முன், செப்பு பட்டயங்களில் எழுதும் பழக்கம் வழக்கத்தில் இருந்தது. கோவில் மற்றும் பிராமணர்களுக்கு, அரசர்கள் நில தானம் செய்ததற்கான ஆவணமாகவே பெரும்பாலான செப்பேடுகள் உள்ளன.
தானம் அளிக்கும் மன்னனுக்கு ஓலைச்சுவடி, தானம் பெறுவோருக்கு செப்பேடு, பொதுமக்கள் பார்வைக்கு கல்வெட்டு என, மூன்று விதங்களில், நில தானம் குறித்த ஆவணங்கள் பதியப்பட்டுள்ளன.முதுகுடுமி செப்பேட்டால், 700 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட நில தானத்துக்கான ஆவணத்தை காட்டி, களப்பிரர் காலத்திற்கு பின், மீண்டும் நிலம் பெற்ற செய்தி அறிய முடிகிறது. அதன் மூல செப்பேடு கிடைத்தால், அதுவே பழமையானதாக இருக்கும்.
சோழர்களின் ஆட்சியில், முதலாம் பராந்தகன் முதல், மூன்றாம் ராஜராஜன் வரை, மிக நேர்த்தியான தகடுகளில், அழகான எழுத்துகளுடன், துல்லியமான எல்லைகளை குறிக்கும் செப்பேடுகள் பொறிக்கப்பட்டுள்ளன.செப்பேடுகள், அரச பரம்பரையைப் பற்றி அறிய உதவும் ஆவணங்களாக உள்ளன. பதிப்பிக்கப்பட்டாத செப்பேடுகள் அதிகளவில் உள்ளதால், ஆய்வாளர்கள் அவற்றை பதிப்பிக்கும் முயற்சியில் இறங்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.இந்நிகழ்ச்சியில், தொல்லியல் துறை அதிகாரிகள், மாணவர்கள், வரலாற்று ஆர்வலர்கள் பங்கேற்றனர்.