சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டம் புழுதிகுட்டை அருகே வெள்ளிக்கவுண்டனூர் என்ற இடத்தில் கி.பி. 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த செக்கு கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
சேலம் வரலாற்று ஆய்வுமையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், ஆறகழூர் பொன். வெங்கடேசன், கவிஞர் மன்னன், மருத்துவர் பொன்னம்பலம், பெருமாள் ஆசிரியர், ஜீவநாராயணன், வீராசாமி ஆசிரியர் ஆகியோர் அடங்கிய குழு புழுதிக்குட்டைப் பகுதியில் உள்ள கரியராமர் கோயிலில் ஆய்வுகள் மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள கல் செக்கில் ஒரு கல்வெட்டு கண்டறியப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?
தரையிலிருந்து கல்செக்கானது 40 செ.மீ உயரமுடையது. இதன் வெளிவிட்டம் 57 செ.மீ. உள் விட்டம் 45 செ.மீ அளவுடையதாகவும் இருக்கிறது. செக்கின் நடுவிலுள்ள குழியின் ஆழம் 30 செ.மீ, விட்டம் 20 செ.மீ ஆகும். உள்விட்டம் உள்ள பகுதியில் இரண்டு வரிகளில் 12 வார்த்தைகளில் கல்வெட்டானது அமைந்துள்ளது. எழுத்தின் வடிவத்தைக் கொண்டு இது 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதலாம்.
‘ஸ்ரீ விளக்கமாறனேன்’ எனக் கல்வெட்டு தொடங்குகிறது. விளக்கமாறன் என்பவன் தன் மகன் மூக்கனை என்பவன் இறந்துவிட்டதால் அவன் நினைவாக செய்து கொடுத்த கல்செக்கு இதுவாகும். இங்கு வந்து வணங்கி பூஜை செய்பவர்களுக்கு பிழியப்பட்ட புண்ணாக்கு மூன்றைத் தரும்படி கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.