சங்க இலக்கியம் எனப்படுவது தமிழில் கிறிஸ்துக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும். சங்க இலக்கியம் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வரை 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டுள்ளது. இப்புலவர்களுள் பல தரப்பட்ட தொழில் நிலையுள்ளோரும் பெண்களும், நாடாளும் மன்னரும் உண்டு. சங்க இலக்கியங்கள் அக்காலகட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் தினசரி வாழ்க்கை நிலைமைகளைப் படம்பிடித்துக் காட்டுவதாய் உள்ளன. பண்டைத்தமிழரது காதல், போர், வீரம், ஆட்சியமைப்பு, வணிகம் போன்ற நடப்புகளைச் சங்க இலக்கியப்பாடல்கள் அறியத்தருகின்றன.
19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களானசி. வை. தாமோதரம்பிள்ளை, உ. வே. சாமிநாதையர் ஆகியோரது முயற்சியினால் சங்க இலக்கியங்கள் அச்சுருப் பெற்றன. சங்க இலக்கியங்கள் எட்டுத்தொகை நூல்கள், பத்துப்பாட்டு நூல்கள், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனப் பெரும்பிரிவுகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
எட்டுத்தொகை நூல்கள் :
- நற்றிணை
- குறுந்தொகை
- ஐங்குறுநூறு – கபிலர்
- பதிற்றுப்பத்து
- பரிபாடல்
- கலித்தொகை – நல்லந்துவனார் முதலிய பலர்
- அகநானூறு – பலர்
- புறநானூறு – பலர்
பத்துப்பாட்டு நூல்கள் :
- திருமுருகாற்றுப்படை :- எட்டாம் நூற்றாண்டு – நக்கீரர்
- பொருநராற்றுப்படை :- முடத்தாமக்கண்ணியார்
- சிறுபாணாற்றுப்படை :- 4_6ஆம் நூற்றாண்டு – நற்றாத்தனார்
- பெரும்பாணாற்றுப்படை :- கடியலூர் உருத்திரங்கண்ணனார்
- நெடுநல்வாடை :- 2 – 4 ஆம் நூற்றாண்டு – நக்கீரர்
- குறிஞ்சிப் பாட்டு :- கபிலர்
- முல்லைப்பாட்டு :- நப்பூதனார்
- மதுரைக் காஞ்சி :- இரண்டாவுது, நான்காவது நூற்றாண்டு – மாங்குடி மருதனார்
- பட்டினப் பாலை :- மூன்றாம் நூற்றாண்டு
- மலைபடுகடாம் :- இரண்டாவது, நான்காவது நூற்றாண்டு – பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் :
- திருக்குறள் :- திருவள்ளுவர்
- நான்மணிக்கடிகை :- ஆறாம் நூற்றாண்டு – விளம்பி நாகனார்
- இன்னா நாற்பது :- 5ஆம் நூற்றாண்டு – கபிலதேவர்
- இனியவை நாற்பது :- ஐந்தாம் நூற்றாண்டு – பூதஞ்சேந்தனார்
- களவழி நாற்பது :- ஐந்தாம் நூற்றாண்டு – பொய்கையார்
- திரிகடுகம் :- நான்கவது நூற்றாண்டு – நல்லாதனார்
- ஆசாரக்கோவை :- 7ஆம் நூற்றாண்டு – பெருவாயின் முள்ளியார்
- பழமொழி நானூறு :- 6ஆம் நூற்றாண்டு – மூன்றுரை அரையனார்
- சிறுபஞ்சமூலம் :- 6ஆம் நூற்றாண்டு – காரியாசான்
- முதுமொழிக்காஞ்சி :- 4ஆம் நூற்றாண்டு – கூடலூர் கிழார்
- ஏலாதி :- 6ஆம் நூற்றாண்டு – கணிமேதாவியார்
- கார் நாற்பது :- 6ஆம் நூற்றாண்டு – கண்ணன் கூத்தனார்
- ஐந்திணை ஐம்பது :- 6ஆம் நூற்றாண்டு – மாறன் பொறையனார்
- திணைமொழி ஐம்பது :- 6ஆம் நூற்றாண்டு – கண்ணன் பூதனார்
- ஐந்திணை எழுபது :- 6ஆம் நூற்றாண்டு – மூவாதியார்
- திணைமாலை நூற்றைம்பது :- 6ஆம் நூற்றாண்டு – கணிமேதாவியார்
- கைந்நிலை :- 6ஆம் நூற்றாண்டு – புல்லங்காடனார்
- நாலடியார் :- 7ஆம் நூற்றாண்டு – சமணமுனிவர்கள் பலர்