‘சிந்து சமவெளி நாகரிகம் அழிந்ததற்கான காரணம்’ – ஐஐடி வெளியிட்டுள்ள ஆய்வில் புதிய தகவல்!

‘சிந்து சமவெளி நாகரிகம் அழிந்ததற்கான காரணம்’ - ஐஐடி வெளியிட்டுள்ள ஆய்வில் புதிய தகவல்!

‘சிந்து சமவெளி நாகரிகம் அழிந்ததற்கான காரணம்’ – ஐஐடி வெளியிட்டுள்ள ஆய்வில் புதிய தகவல்!

சிந்து சமவெளி நாகரிகம், சுமார் 900 ஆண்டுகளாக நிலவிவந்த வறட்சியின் காரணமாகவே அழிந்ததாக, ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுமார் 4,500 ஆண்டுகளுக்கு முன்பு, தற்போதுள்ள இந்தியா, பாகிஸ்தான், பலுசிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்த்த ஒரு பகுதியில் மக்கள் வாழ்ந்துள்ளனர். இது, சிந்து நதியை ஒட்டிய பகுதி என்பதால், இங்கிருந்தவர்கள் சிந்து சமவெளி மக்கள் என அழைக்கப்பட்டனர். இவர்களைப் பற்றிய தகவல்களைப் பிற்காலங்களில் ஹரப்பா, மொஹஞ்சதாரோ ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சிகளின்மூலம் கண்டுபிடிக்கபட்டது.

காரக்பூர் ஐஐடி-யில் உள்ள அறிவியல் ஆய்வாளர்கள், இயற்பியல் மற்றும் புவியியல் சார்ந்த படிப்புக்காக, கடந்த 5000 ஆண்டுகளின் மழை பொழிவுகுறித்து குறித்து ஜம்மு-காஷ்மீர், லடாக் பகுதியில் உள்ள ஒரு நதிகரையில் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வில், 4,350 ஆண்டுகளுக்கு முன் சிந்து சமவெளி நாகரிக காலத்தில் அப்பகுதியில் சுமார் 900 ஆண்டுகளாக வறட்சி நிலவியது என்பதைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த வறட்சிக்கு, சிந்து நதியின் நீரோட்டம் குறைந்ததே காரணம் எனத் தெரிவித்துள்ளனர். மேலும், அப்பகுதிகளில் மிதமான மழை மட்டுமே பெய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

“கி.மு 1,450 முதல் கி.மு 2,350 ஆண்டு வரை சிந்து சமவெளி பகுதிகளில், மிகப் பெரிய பருவநிலை மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. அதன்பிறகு உருவான வறட்சியின் காரணமாக, அப்பகுதி மக்கள் தண்ணீர் மற்றும் பசுமையைத் தேடி வேறு இடங்களுக்குச் செல்லும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இடம் பெயர்ந்த மக்கள், படிப்படியாக கங்கை-யமுனா பள்ளத்தாக்கு, கிழக்கு மற்றும் மத்திய உத்தரப்பிரதேசம் நோக்கி நகர்ந்துள்ளனர். கிழக்கில் பீகார் மற்றும் வங்காளம் ஆகிய பகுதிகளிலும் குடிபெயர்ந்துள்ளனர்” என காரக்பூர் ஐஐடி-யின் பேராசிரியரும், இந்த ஆய்வின் தலைமை ஆராய்ச்சியாளருமான அனில் குப்தா தெரிவித்துள்ளார்.

சிந்து சமவெளி அழிவுகுறித்து முன்னதாக நடைபெற்ற ஆராய்ச்சியில், அங்கு 200 ஆண்டுகளாக இருந்த வறட்சியே அழிவின் காரணம் எனக் கூறப்பட்டிருந்தது. தற்போது, ஐஐடி வெளியிட்டுள்ள இந்த புதிய ஆய்வு முடிவில், சிந்து சமவெளி பகுதிகளில் சுமார் 900 ஆண்டுகளாக வறட்சி நிலவியது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: