தென்காசி அருகே பாண்டியர் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு!

தென்காசி அருகே பாண்டியர் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு!

தென்காசி அருகே பாண்டியர் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு!

தென்காசியை அடுத்த ஆய்க்குடி அனந்தாபுரத்திற்கு அருகே உள்ள குன்றில் கீழிருந்து மேல் நோக்கி பண்டைய கால தமிழ் எழுத்துக்கள் செதுக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகையில், பிற்கால பாண்டியர்களில் ஒருவரான குலசேகரபாண்டியன் காலத்து கல்வெட்டு ஆகும்.

இந்த கல்வெட்டில் குற்றாலம் கோயிலுக்கு சில பகுதி நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்களை கருமாணிக்காழ்வான் மூலமாக வரிகள் நீக்கி தானமாக வழங்கியதை குறிப்பிடுகிறது. ஒரு சில எழுத்துக்கள் நீரோட்டம் காரணமாக தெளிவாக இல்லை. 15ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டாக இருக்கலாம் என்றார். தென்காசி மற்றும் விந்தன்கோட்டை ஆகியவற்றை தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பிற்கால பாண்டியர் காலத்து கல்வெட்டாக இருக்கலாம் என்று கருதப்படுவதால் இதுகுறித்து அரசு தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: