பல்லவ கால பழுதடைந்த மண்டபம் ஆய்வு செய்த தொல்லியல் துறை !

பல்லவ கால பழுதடைந்த மண்டபம் ஆய்வு செய்த தொல்லியல் துறை !

பல்லவ கால பழுதடைந்த மண்டபம் ஆய்வு செய்த தொல்லியல் துறை !

திருத்தணி :

திருத்தணி ஒன்றியம், அகூர் ஊராட்சிக்குட்பட்ட நத்தம் கிராமத்தில், பல்லவ கால வழிபோக்கர் மண்டபம் பராமரிப்பின்றி பழுதடைந்து கிடந்தது. மேலும், அந்த மண்டபத்தில் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் ஆடு, மாடுகள் கட்டி வைத்து மாட்டுத் தொழுவாக பயன்படுத்தி வந்தனர். இது குறித்து வெளியான செய்தியையடுத்து, தொல்லியல் துறை ஆய்வாளர் பழுதடைந்த பல்லவத்து கால மண்டபத்தை நேரில் வந்து ஆய்வு செய்தார். தமிழக தொல்லியல் துறை கல்வெட்டு ஆய்வாளர் பி.ஜி.லோகநாதன், நத்தம் கிராமத்திற்கு சென்று பழுதடைந்த மண்டபத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


அவர் கூறியதாவது :

வழிப்போக்கர் மண்டபம் என்பது நெடுஞ்சாலைகளை ஒட்டிய பகுதியில் அமைக்கப்படும். வணிக ரீதியாகவோ, கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கியிருந்து செல்வதற்கு அமைக்கப்படும். அந்த வகையில், நத்தம் கிராமத்தில், 10 ஏக்கர் பரப்பளவில், கி.பி. 14ம் நுாற்றாண்டில் மண்டபம் ஏற்படுத்தப்பட்டது. இந்த மண்டபத்தில் பயணத்தின் களைப்பினை போக்கவும், தமது உடமைகளையே அல்லது சுமைகளை இறக்கி வைக்கும் இடமாக இருந்துள்ளது. மேலும், திருத்தணி முருகன் கோவிலுக்கு காவடிகள் எடுத்து வரும் பக்தர்கள் இந்த மண்டபத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் தங்கியிருந்து, குளத்தில் புனித நீராடி சென்றாக இப்பகுதி வாசிகள் கூறியுள்ளன. தற்போது, பழுதடைந்த இந்த மண்டபத்தை ஆய்வு செய்தேன். இந்த ஆய்வறிக்கை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வேன். மேலும், பழுதடைந்த வழிப்போக்கர் மண்டபத்தை சீரமைப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இத்தகைய தொன்மை வாய்ந்த மண்டபங்களை புனரமைத்து பாதுகாக்கவும் பொதுமக்களும் முன் வந்தால், பல ஆண்டுகள் இந்த மண்டபங்கள் நிலைத்திருக்கும்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: