தமிழ்நாட்டின் நாஸ்டர்டாமஸ், செஞ்சி ஏகாம்பர முதலியார்!

தமிழ்நாட்டின் நாஸ்டர்டாமஸ், செஞ்சி ஏகாம்பர முதலியார்!

தமிழ்நாட்டின் நாஸ்டர்டாமஸ், செஞ்சி ஏகாம்பர முதலியார்!

நாஸ்டர்டாமஸ்- எதிர்காலத்தைக் கணித்து எழுதிய குறிப்புகளுக்காக உலகம் முழுவதும் அறியப்படுபவர். அவரது காலத்திற்குப் பின் நடந்தனவற்றை அவர் எழுதிய குறிப்புகளோடு பொருத்தி, உலகம் முழுவதும் நடக்க இருப்பதை அன்றே கணித்துச் சொன்னவர் என்ற புகழுக்குச் சொந்தக்காரர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.அப்பெருமை மேலைநாடுகளுக்கு மட்டும்தான் சொந்தமா என்ன?

வருங்காலத்தைக் கணித்தவர் எவரும் நம் தமிழ் நாட்டில் இல்லையா என்று எவரும் கேட்டு விடாதிருக்கத் (!) தமிழில் அருளப்பட்ட நூல் தான் காலக்கியான ‘கும்மி’. இதை எழுதியவர் செஞ்சி ஏகாம்பர முதலியார். நூல் பதிப்பிக்கப்பட்ட ஆண்டு – 1898

இவர் அப்படி என்ன சொல்லியிருக்கிறார்?

இந்த நூலின் முதல் பதிமூன்று கண்ணிகள் வாசிக்கும் நிலையில் இல்லை.

வாசித்தவரை, பின்பு நடக்கப்போவது பற்றிய ஆசிரியரின் கற்பனை, அல்லது கணிப்பு என்றே படுகிறது.

இதோ காலக்கியான கும்மியில் இருந்து சில பாடல்கள்….,

 • “மலையின் சிகரத்தி லுண்டாகும்பெரு
  மக்கினியாலே வெகுஜனங்கள்
  நலிந்து வெந்துபின் மரணம தாகிடும்
  நாட்டிலுள்ளோரே அறிந்திடுவீர் ” (15)
 • “ஊழியெனும் விஷக் காற்றும் பெருகியே
  உள்ளதோர் கட்டிப் பலப்பிணியால்
  தாழ விழுந்தும் படுத்தாப்போல் குந்தியும்
  தரணியில் வெகுபேர்கள் மடிகுவராம்” (23)
 • “அண்டத்தில் நாலுவால் வெள்ளி முளைத்திடும்
  அதினால் சத்தமும் மரண முண்டாம்
  அண்டம் வெடித்திடும் வாறது பூமி
  ஆகுஞ் சத்தத்தால் மரண முண்டாம்
  கண்டிடும் பாதி ராத்திரி தன்னிலே
  காக்கைகள் மெல்லவும் கற்றிடுமாம் (24,25 )
 • “திருவள்ளூர் வீர ராகவ சாமிக்குத்
  தீண்டியே வேர்வை பிடித்திடுமாம்
  அருள்வளர் கங்கை யமுனை நதிகளும்
  அதிகமாய் வெள்ளம் பெருகிடுமாம்.”

இதில் காணப்படும் சில பாடல் வரிகள் இரு மதத்தவரிடையே தேவையற்ற பகைமையை உருவாக்கலாம்.

வேலூர், கும்பகோணம் போன்ற நகரங்கள் குறித்தும் கோயில்களின் அழிவு குறித்தும் செய்திகள் இதில் உள்ளன.

காமாட்சி கண்களில் நீர் வடியும். நெல் வயலில் புளியமரம் பூ பூக்கும். எறும்புகள் யானைபோல் பெரிதாகும். குரங்குகள் கீதம்பாடும் பொம்மைகள் பேசும், அம்மாவாசையில் நிலவு வரும். ஆண் ஆடு கன்று ஈனும் என்பன போன்ற அரிய செய்திகள் (?) இந்நூலுள் உண்டு.

இவற்றுள் ஏதேனும் நடப்பின், திரு. ஏகாம்பர முதலியாரை, தமிழ்நாட்டின் நாஸ்டர்டாமஸ் என அழைக்க இடமுண்டு.

– சுரேஸ் மார்டின் முகநூலிலிருந்து..

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: