உள்நாட்டுப் போருக்கு பேச்சுவார்த்தை மூலம் அமைதித் தீர்வு கண்டமைக்காக அமைதிக்கான நோபல் பரிசு! அதே நேரம் ஈழத்திற்கு சர்வதேசம் துரோகமா?

உள்நாட்டுப் போருக்கு பேச்சுவார்த்தை மூலம் அமைதித் தீர்வு கண்டமைக்காக  அமைதிக்கான நோபல் பரிசு! அதே நேரம் ஈழத்திற்கு துரோகமா?

உள்நாட்டுப் போருக்கு பேச்சுவார்த்தை மூலம் அமைதித் தீர்வு கண்டமைக்காக அமைதிக்கான நோபல் பரிசு! அதே நேரம் ஈழத்திற்கு துரோகமா?

கொலம்பிய நாட்டு 50 ஆண்டுகால உள்நாட்டுப் போருக்கு பேச்சுவார்த்தை மூலம் அமைதித் தீர்வு கண்டமைக்காக, கொலம்பிய நாட்டு 32-வது மற்றும் தற்போதைய அதிபர் ஜுவன் மெனுவேல் சாண்டோஸ் (Juan Manuel Santos)-க்கு 2016 ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

2009 வரை ஈழத் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக அழிந்தபோது திரும்பிப் பார்க்காத சர்வதேசம் கொலம்பிய நாட்டு மக்களில் சர்வதேசத்தின் கருனை என்ன? ஈழத்தில் 50 ஆண்டுகால உள்நாட்டு சண்டையில் 02 லட்சத்து 20 ஆயிரம் உயிர்களுக்கு மேல் பலியாகின. சுமார் 60 லட்சம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.

இதே நேரம், இந்த நோபல் பரிசானது, நியாயமான அமைதிக்காக பல இன்னல்களை அனுபவித்து போராடிய கொலம்பிய நாட்டு மக்களுக்கு அளிக்கும் அர்ப்பணிப்பு என்று, நோபல் குழு தெரிவித்துள்ளது.

ஜூன் 2016-ல் கொலம்பிய அதிபர் சாண்டோஸுடன் புரட்சி அமைப்பு போர் நிறுத்த அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டது. ஆனால் இறுதி அமைதி ஒப்பந்தம் பொது வாக்கெடுப்பை கோருவதாக உள்ளது. எவ்வாறாயினும் 50 ஆண்டு கால கொடூர குருதி வரலாற்றுக்கு இந்த அமைதி ஒப்பந்தம் வரலாறு காணாத முன்னெடுப்பாகும்.

ஆனாலும் இந்த பொதுவாக்கெடுப்பு சாண்டோஸுக்கு பின்னடைவையே ஏற்படுத்தியது. அமைதி ஒப்பந்தத்திற்கு எதிராக சுமார் 13 மில்லியன் கொலம்பியர்கள் வாக்களித்தனர், அதாவது 50.24% அமைதி ஒப்பந்தத்திற்கு எதிராக வாக்களித்தது பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால் கொலம்பியாவின் எதிர்காலமே கேள்விக்குறியானது. அமைதி நடைமுறை நிறுத்தப்பட்டு சிவில் யுத்தம் மீண்டும் மூளும் அபாயம் ஏற்பட்டது.

இந்த அச்சத்தினால் ஜனாதிபதி சாண்டோஸ் அரசும், கொலம்பிய புரட்சிகர ஆயுதப்படைத் தலைவர் ரோட்ரிகோ லண்டோனோ இருவரும், போர்நிறுத்த அமைதி ஒப்பந்த நடைமுறையை தக்கவைப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.

பெரும்பான்மை மக்கள் அமைதி ஒப்பந்தத்துக்கு எதிராக வாக்களித்தார்கள் என்பதால் அமைதி நடைமுறையே செத்துவிட்டது என்று பொருளல்ல. காரணம் எதிர்த்து வாக்களித்தவர்கள் அமைதிக்கு எதிரானவர்களல்லர். மாறாக அமைதி ஒப்பந்தத்தின் குறிப்பிட்ட அம்சங்களை எதிர்த்தவர்கள் என்பது கவனிக்கத்தக்கது.

தற்போது ஜனாதிபதி சாண்டோஸ், முதற்கட்ட அமைதி ஒப்பந்தத்தை நிரந்தர அமைதித் தீர்வு காணும் தேசிய உரையாடலுக்கு பலதரப்பினரையும் ஒருங்கிணைக்க வேண்டிய முக்கியத்துவத்தை நோபல் குழு அடிக்கோடிட்டு அழுத்தம் கொடுத்துள்ளது. அமைதி ஒப்பந்தத்தை எதிர்த்தவர்கள் கூட இந்த தேசிய உரையாடலுக்கு ஆதரவு அளித்துள்ளனர். இனிவரும் அமைதிப் பேச்சு வார்த்தைகளை அமைதியைக் கட்டமைக்க கொலம்பிய மக்கள் ஒத்துழைப்பு நல்குவார்கள் என்று நோபல் குழு எதிர்நோக்குகிறது.

எனவே கொலம்பியாவில் நீதியையும் அமைதியையும், நியாயத்தையும், நல்ல முறையான வாழ்க்கையையும் கோரும் மக்களை இந்த நோபல் பரிசு ஊக்குவிக்கும் என்று நோபல் குழு தெரிவித்துள்ளது. இந்த அமைதி ஒப்பந்தத்தை இறுதி வடிவம் பெறச் செய்து நிரந்தரமாக்கினால்தான் கொலம்பிய மக்கள் இதைவிட பெரிய சவால்களான ஏழ்மை, சமூக அநீதி, போதை மருந்து குற்றங்கள் போன்றவற்றை எதிர்கொள்ள முடியும்.

கொலம்பிய சிவில் யுத்தம் நவீன காலக்கட்டங்களில் உயிருடன் இருக்கும் ஒன்றாகும். தென் அமெரிக்காவில் இன்றும் உயிர்ப்புடன் இருக்கும் ஆயுத எழுச்சியாகும். பொதுவாக்கெடுப்பில் சாண்டோஸின் அமைதி ஒப்பந்தம் தோற்கடிக்கப்பட்டாலும் இதுவரையல்லாத இந்த முயற்சி நிரந்தர அமைதித் தீர்வுக்கு அருகில் கொலம்பியாவைக் கொண்டு வந்துள்ளது. எனவே நோபல் பரிசுக்கு இவரது தேர்வு கொலம்பியாவின் எதிர்கால அமைதிக்கும் நல்வாழ்வுக்கும் உகந்ததாகும் என்று நோபல் குழு தெரிவித்துள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: