திருப்பூர் அருகே நாயக்கர் கால நடுகற்கல் கண்டுபிடிப்பு!

திருப்பூர் அருகே நாயக்கர் கால நடுகற்கல் கண்டுபிடிப்பு!

திருப்பூர் அருகே நாயக்கர் கால நடுகற்கல் கண்டுபிடிப்பு!

சேவூர் காவல் நிலையத்தில் போர்களை விளக்கும் பழமையான மூன்று நிலை நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

செம்பியன் கிழானடி நல்லூர் என வரலாறு கூறும் செழிப்பு மிகுந்த நகரமாக சேவூர் விளங்கியது. ‘சே’ என்றால் எருது என்பது பொருள். சேவூர் என்பது ஆவினங்கள் நிறைந்த மேய்ச்சல் பகுதியாக ஒரு காலத்தில் விளங்கியது. தற்போது சிறுமுகை மற்றும் சத்தி பகுதியிலிருந்து துவங்கும் வனப்பகுதி அக்காலத்தில் சேவூர் வரையிலும் இருந்தது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?


விலங்குகள் ஆவினங்களைத் தாக்கியபோது அவற்றை எதிர்த்துப் போரிட்டுக் கொன்ற அல்லது தன் உயிரை இழந்த வீரர்களுக்கு நடுகல் எடுக்கும் வழக்கம் வீரத் தமிழர்களின் மரபாக இருந்தது. அத்தகைய வீரனின் நடுகல் ஒன்றை சேவூர் காவல் நிலைத்தில் உள்ளது. அதைப் பற்றிய ஆய்வினை திருப்பூர் வரலாற்றுச் சுவடுகள் ஆய்வு மையம் மேற்கொண்டது.

சேவூர் கிராம நிர்வாக அலுவலகம் அருகே கைவிடப்பட்ட நிலையில் இருந்த நடுகல்லானது 2015ல் எஸ்.பி அமித்குமாரின் முயற்சியால் சேவூர் காவல் நிலையத்தில் அடைக்கலமாகியது. அப்போது இது போர்களை விளக்கும் நடுகல் என அறியப்பட்டது.

இந்த வீர நடுகல்லானது மூன்று நிலைகளைக் குறிக்கும் நடுகல் ஆகும். புலிப் பட்டான் கல் மற்றும் சதிக்கல் இரண்டுக்கும் பொதுவாக அமைக்கப்பட்ட சிறப்பான நடுகல் வகையைச் சார்ந்தது.

இந்த நடுகல்லின் கீழ்வரிசையில் ஒரு வீரன் வில்லுடன் புலியைத் தாக்குவது போல் உள்ளது. அவன் மனைவி அருகில் காணப்படுகிறாள். இது முதல் நிலையாகும். இதில் புலியுடன் நடந்த போரில் இறந்த வீரனும் அதனால் சிதையேறும் அந்த வீரனின் மனைவியும் காட்சிப் படுத்தப்பட்டு உள்ளனர்.

இரண்டாம் நிலையானது வீரமரணம் எய்திய வீரனையைம் உடன்கட்டை ஏறிய அவனது மனைவியையும் சாமரம் வீசும் தேவகன்னிகைகள் வானுலகம் அழைத்துச் செல்லும் நிலை அழகுறக் காட்சிப் படுத்தப் பட்டுள்ளது.

மூன்றாம் நிலையானது வீரனும் அவனது மனைவியும் சிவலோகத்தை அடைகிறார்கள். சிவலிங்க உருவமும் ரிஷப உருவமும் காட்சியளிக்கிறது. வீரனின் ஆன்மா சிவலிங்கத்திற்கு மாலை அணிவிக்கும் காட்சி உள்ளது. இவ்வாறு வீரனும் அவன் மனைவியும் சிவனடி சேர்கிறார்கள். இதுவே இறுதி நிலையாக உள்ளது. இவ்வாறான சிறப்பான நடுகற்கள் நாயக்க மன்னர்கள் காலத்தில் நடப்பட்டன. இதனை 16, -17ம் நூற்றாண்டாக அனுமானிக்கிறோம். தமிழர்களின் வீரத்தையும் தியாகத்தையும் இத்தகைய நடுகற்கள் காலம் காலமாய்ப் பறைசாற்றி நிற்கின்றன என்றார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>