சேலம் – நாமக்கல் எல்லையில் 1,000 ஆண்டு பழமையான பாண்டியன் பாறை கல் திட்டு !

சேலம் - நாமக்கல் எல்லையில் 1,000 ஆண்டு பழமையான பாண்டியன் பாறை கல் திட்டு !

சேலம் – நாமக்கல் எல்லையில் 1,000 ஆண்டு பழமையான பாண்டியன் பாறை கல் திட்டு !

தமிழர்களின் பாரம்பரியத்தையும், வீரத்தையும் பறைசாற்றும் வகையில், 1,000 ஆண்டுகளுக்கு முன் அமைத்த, பாண்டியன் பாறை என்ற, ‘கல் திட்டு’ நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது. ஏறத்தாழ, 1,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்கள், முன்னோரை புதைத்த இடத்தில், சிறிய பாறைகளை நிற்க வைத்து, அதன் மேல் பெரிய தட்டையான பாறையை வைத்து, சிறிய குகை போன்ற அமைப்பை உருவாக்கினர். அவற்றில், முன்னோர் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் அவர்கள் வாழ்க்கை குறித்த கல்வெட்டு அல்லது பாறை ஓவியங்களை தீட்டி, வழிபாடு நடத்தியுள்ளனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


நாமக்கல் மாவட்டம், மின்னக்கல் செல்லும் வழியில், பாறை குன்றின் நடுவில் பழமையான, கல் திட்டு ஒன்று உள்ளது. பாண்டிய மன்னன் ஒருவன் இவ்வழியாகச் சென்ற போது, தங்க இடம் கிடைக்காமல், படை வீரர்களை கொண்டு, பாறையை உடைத்து, கல் திட்டை அமைத்து, அதில் தங்கி, இளைப்பாறி சென்றதாக கூறப்படுகிறது. எனவே, இந்த பாறைக்கு, ‘பாண்டியன் பாறை’ என்ற பெயர் ஏற்பட்டதாகவும், இப்பகுதி மக்கள், 20 ஆண்டுகளுக்கு முன் வரை, இந்த பாறையில் தானியங்களை காய வைக்கவும், ஓய்வெடுக்கவும் பயன்படுத்தி வந்துள்ளனர்.

வரலாற்று ஆய்வாளர்கள் கூறியதாவது :

இங்குள்ள பாண்டியன் பாறை என்ற கல் திட்டு, 1,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பழங்கால மனிதர்களின் உழைப்பால் உருவானது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, கல் திட்டுகள், மலையடிவாரத்தில் மண் தரையில் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இங்கு பாறை குன்றின் மேல் சிறிய கற்களை நிற்க வைத்து, 10 டன்னுக்கு மேலான எடையுள்ள தட்டையான பாறையை துாக்கி, நிற்க வைத்து உருவாக்கியுள்ளனர். இதில் எந்தவிதமான பாறை சிற்பங்களோ, பாறை ஓவியங்களோ காணப்படவில்லை. பழமையான கல் திட்டு தற்போது, மது பிரியர்களின் திறந்தவெளி ‘பாராக’ மாறி, அனைத்து சமூக விரோத செயல்களும் நடந்து வருகின்றன. பழமையான கல் திட்டை, பாதுகாக்க அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags: ,

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: