பெண்களை காவடி தூக்கும் சிற்பம் கண்டுபிடிப்பு!

Naicker term sculpture in tirupur districtசிந்து சமவெளி நாகரிக முத்திரையில் உள்ளது போல், காவடி தண்டு முறையில், பெண்களை தோளில் சுமந்து செல்லும் சிற்பம், திருப்பூர் அருகே கண்டறியப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே வல்லக்கொண்டம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஒருவர் காவடி தண்டு முறையில், இரு பெண்களை துாக்கி செல்லும் வகையில், அற்புத வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


வல்லக்கொண்டம்மன் கோவிலில், 55 செ.மீ., உயரம், 40 செ.மீ., அகலத்தில், சிற்பம் காணப்படுகிறது. தோளில் ஒரு கம்பை வைத்து, இரு பெண்களை, ஆண் ஒருவர் சுமந்து வருவது போல் உள்ளது. தோளில் தண்டு, வலது கையில் ஆயுதம், இடையில் குறுவாள், வேலைப்பாடுகளுடன் கூடிய ஆடை என, சிற்பம் நேர்த்தியாக உள்ளது. சிந்து சமவெளி நாகரிக முத்திரையில் உள்ளது போல், இது உள்ளது.

பண்டைக் காலத்தில், ஓரிடத்தில் இருந்து, வேறொரு இடத்துக்கு செல்லும் மக்கள், பொருட்களை தோளில் சுமந்து செல்லும் வழக்கத்தை கொண்டிருந்தனர். காவடி தண்டு மூலம், இருபுறமும் பொருட்கள், உணவு தானியங்கள், நீர் கலன், பூஜை பொருட்களை எடுத்து சென்றுள்ளனர். அதேபோல், தற்போது இந்த, நாயக்கர் கால சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது. சிந்து சமவெளி நாகரிகம் துவங்கி, நாயக்கர் காலம் வரை, 3,000 ஆண்டுகளாக, காவடி மரபு தொடர்ந்து வருகிறது. இவ்வாறு தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மைய இயக்குனர் கூறினார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>