இந்தியாவின் முதல் விடுதலை போர் வீரர் அழகு முத்துக்கோன்!

இந்தியாவின் முதல் விடுதலை போர் வீரர் அழகு முத்துக்கோன்!

இந்தியாவின் முதல் விடுதலை போர் வீரர் அழகு முத்துக்கோன்!

வீர அழகு முத்துக்கோன் (1728-1757) கட்டாலங்குளம் சீமையின் அரசராக இருந்தவர். ஜெகவீரராமபாண்டிய எட்டப்பன் என்கிற எட்டயபுரம் மன்னருக்கு சிறந்த நண்பராக விளங்கினார். இந்தியாவின் முதல் விடுதலை போர் 1857 என்று அறியப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பே இந்தியாவின் பல இடங்களில் போர் நடந்துள்ளது. அதில் முதன்மையானவர் மன்னர் வீர அழகுமுத்துக்கோன் (1728-1757).


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


தந்தை மன்னர் அழகு முத்துக்கோன்(அழகுமுத்து இவர்களின் குடும்பப்பெயர் பல தலைமுறைக்கு முன்பிருந்து தற்போது வரை இப்பெயர் உள்ளது) 1725-ம் ஆண்டு கட்டாலங்குளம் மன்னராக முடி சூட்டி கொண்டார். இவருக்கும் ராணி அழகுமுத்தம்மாளுக்கும் 1728-ம் ஆண்டு நமது விடுதலை வீரர் வீர அழகு முத்துக்கோன் பிறந்தார். 1729-ம் ஆண்டு தம்பி சின்னஅழகுமுத்துக்கோன் பிறந்தார். 1750 -ல் தந்தை மன்னர் அழகு முத்துக்கோன் அனுமந்தகுடி போரில் வீர மரணம் அடைந்தார். தந்தை இறந்த அதே ஆண்டு 1750-ல் அண்ணன் வீர அழகு முத்துக்கோன் தன்னுடைய 22-ம் வயதில் மன்னராக முடி சூட்டி கொண்டார்.

முதன் முதலாக ஆங்கிலேயர்களை எதிர்த்தும், பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டுவதை தடுக்கவும் செய்தார், வீர அழகு முத்துக்கோன். இதனால் கோபமுற்ற ஆங்கிலேய அரசு பிரிட்டிஷ் ஜெனரல் முகம்மது யூசுப் கானை அனுப்பி வைத்தது. வீர அழகு முத்துக்கோனுக்கும் முகம்மது யூசுப் கானுக்கும் பெத்தநாயக்கனூர் கோட்டையில் போர் நடந்தது. வீர அழகுமுத்துவின் வலது கால் சுடப்பட்டது. இருப்பினும் 3 மணி நேரம் போர் தொடர்ந்தது. இறுதியில் வீர அழகு முத்துக்கோனும் அவருடைய 6 தளபதிகள் மற்றும் 248 போர் வீரர்களும் இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்டு நடுக்காட்டூர் என்னும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். பீரங்கி முன் நிறுத்தப்பட்டு வரி செலுத்துமாறு வற்புறுத்தப்பட்டனர். மன்னிப்பு கேட்டால் உயிர் மிஞ்சும் என்று கேட்டும் வீர அழகுமுத்துக்கோன் மன்னிப்பு கேடக மறுத்துவிட்டார். பிறகு 248 வீரர்களின் வலது கரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. பீரங்கி முன் நின்ற வீர அழகுமுத்துக்கோனும் அவருடைய 6 தளபதிகளும் மார்பில் சுடப்பட்டு வீர மரணம் அடைந்தனர். பீரங்கி முன் நின்று சாகும் தருவாயிலும் தன்னைச் சேர்ந்தவர்களை காட்டிக்கொடுக்க மாட்டேன் என்று கூறிய நெஞ்சுரம் மிக்கவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பெரிய வீரப்ப நாயக்கர் எழுதிக் கொடுத்த செப்புப் பட்டயத்தில் இடம் பெற்றுள்ள கோபால வம்சம், கிருஷ்ண கோத்திரம் என்ற சொற்களைக் கொண்டு இவர் யாதவர் குலத்தவர் என்பது நிருபிக்கப்பட்டுள்ளது

சின்னஅழகுமுத்துக்கோன்(1729-1755) வாரிசுகள்:

முதல் விடுதலை வீரர் மன்னர் வீர அழகுமுத்துக்கோன் (1728-1757) அவர்களின் உடன்பிறந்த தம்பி
சின்ன அழகுமுத்துக்கோன்(1729-1755) அவர்களின் நேரடி வாரிசுகளான கட்டாலங்குளம் மன்னர் அழகுமுத்து துரைச்சாமி அவரது தம்பி சின்னச்சாமி இருவரும் உள்ளனர்.

சின்ன அழகுமுத்துக்கோன்(1729-1755) 1755-ம் ஆண்டு அண்ணன் மன்னர் வீர அழகுமுத்துக்கோன் தலைமையில் நடந்த விடுதலை போரில் வீரமரணம் அடைந்தார். இவர் கோனார் குலத்தில் சேர்வைக்காரர் என்ற பட்டம் பெற்றவர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>