தமிழ் ஆர்வலர்களைக் கலங்க வைத்த ஆசிரியர் ராமசாமியின் மறைவு!

தமிழ் ஆர்வலர்களைக் கலங்க வைத்த ஆசிரியர் ராமசாமியின் மறைவு!

“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்” என்ற பாடல் வரிகளுக்கு சரியாகப் பொருந்தக் கூடியவர் ஆசிரியர் ராமசாமி. தமிழ் மொழி, தமிழர் நலனுக்காகத் தன் உழைப்பால் கிடைத்த பொருளை வழங்கியவர் தற்போது மறைவுக்குப் பின் தன் உடலையும் மருத்துவ ஆராய்சிக்காக வழங்கி, அழியாமல் எங்களுடன் வாழ்கிறார்” என்கிறார்கள் மதுரையிலுள்ள தமிழ் உணர்வாளர்கள்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்….


மதுரை திருப்பரங்குன்றம் ஹார்விபட்டியில் வசித்து வந்தவர் ஆசிரியர் ராமசாமி. அரசுப் பள்ளி தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவருக்கு வயது 85. ஹார்விப்பட்டியில் தனியாக வாழ்ந்து வந்த இவர், பெரியாரின் கொள்கைகளில் பற்றுடன் இருந்தவர். விடுதலை நாளிதழின் தீவிர வாசகர். மதுரையில் நடக்கும் அனைத்து தமிழர் நலன் சார்ந்த கூட்டங்களிலும் கலந்துகொண்டு வந்தார்.

அப்பகுதியில் பொதுமக்களால் மதிக்கப்பட்டு வந்தவர் தனக்கு வந்த ஓய்வூதியத்தை பொதுப்பிரச்னைகளுக்கும் தமிழர் நலன் சார்ந்த விஷயங்களுக்கும் செலவு செய்து வந்தார். கடந்த வருடம் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க காலதாமதம் ஆவதை அறிந்து, தன் சேமிப்புத் தொகையிலிருந்து ஐந்து லட்சத்தை வழங்கினார். அப்போதுதான் இவரைப் பற்றி பலரும் அறிந்துகொண்டனர். தமிழறிஞர்கள், உணர்வாளர்கள் அடிக்கடி இவரைச் சந்தித்து வந்தனர்.

வயது முதிர்வின் காரணமாகக் கடந்த 21-ம் தேதி காலமானார். இந்தச் செய்தி கேட்டு அரசியல் கட்சியினர், தமிழ் உணர்வாளர்கள் மட்டுமல்லாமல் திருப்பரங்குன்றம், ஹார்விப்பட்டி பகுதி பொதுமக்கள் மிகவும் வேதனை அடைந்தார்கள். தன் மரணத்துக்குப் பின் தன் உடலை மருத்துவக் கல்லூரியில் ஒப்படைத்து விட வேண்டும் என்று கூறியிருந்ததால் அதன்படி அவர் உடல் தானமாக வழங்கப்பட்டது. மருத்துவ மனையில் ஏராளமான மக்கள் வந்திருந்து அவருக்கு இறுதி மரியாதை செய்தனர்.

  • விகடன்
Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>