நடு கல் – வீரர்களின் நினைவு சின்னம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரிய கண்டுபிடிப்பு !

நடு கல் - வீரர்களின் நினைவு சின்னம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரிய கண்டுபிடிப்பு

நடு கல் – வீரர்களின் நினைவு சின்னம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரிய கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், நல்லுாரில், 14ம் நுாற்றாண்டை சேர்ந்த, நடு கற்களின் தொகுப்பு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. தம் குழுவினரை காக்க, எதிரிகளிடமும், கொடிய விலங்குகளிடமும் போரிட்டு, வீர மரணம் அடைந்தோருக்கு, கல் வைத்து வணங்கும் வழக்கம், பழங்காலத்தில் இருந்தது. அந்த கல்லில், கையில் வாளுடன் கூடிய உருவம் பொறிக்கப்படும்; அவை, நடு கல் என அழைக்கப்படும்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நடுகற்கள், கல் பதுக்கைகள் அதிகம் உள்ளன. சமீபத்தில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் – கக்கனுார் சாலையில், 10வது கி.மீ., உள்ள நல்லுாரில், 14ம் நுாற்றாண்டை சேர்ந்த, நடு கற்களின் தொகுப்பு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

நடு கல் - வீரர்களின் நினைவு சின்னம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரிய கண்டுபிடிப்பு

நடு கல் – வீரர்களின் நினைவு சின்னம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரிய கண்டுபிடிப்பு

krishnagiri_nallur_nadukal_3

இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட தேடல் குழுவை சேர்ந்தவர்கள் கூறியதாவது :

ஓசூர், வெங்கடபெருமாள் கோவிலில் உள்ள, சமண பாறை கல்வெட்டில், ‘சித்திரைமேழி நல்லுார்’ என்ற குறிப்பு உள்ளது. மேலும், அது, சமணர் கோவிலுக்கு, தானமாக வழங்கப்பட்ட இடம் எனவும் கூறப்பட்டுள்ளது. அதனால், நாங்கள் நல்லுாரில் ஆய்வு செய்தோம். ஆய்வில், ஊருக்கு வெளியே, ஆறு நடு கற்கள் அருகருகே இருந்ததை கண்டுபிடித்தோம். அவற்றில் முறையே, நாகம், புலி, மனிதனுடன் மோதும் வீரரின் உருவங்கள் உள்ளன. அவை, பாம்பு கடித்து இறந்த வீரன், புலியுடன் சண்டையிட்ட வீரன், எதிரியுடன் மோதிய வீரர்களின் நடு கற்களாக இருக்கலாம். மேலும், இரண்டு வீரர்கள், வாளை தலைக்கு மேல் துாக்கி காட்டுவது போல், ஒரு நடு கல் உள்ளது. அது, வெற்றியை கொண்டாடும் வீரரின் அடையாளமாக இருக்கலாம்.

ஒரு நடு கல்லில், வாளை உயர்த்திய இரண்டு வீரர்களுடன், குடுவையுடன் ஒரு பெண் உருவமும் உள்ளது. இதுவும், வெற்றியின் கொண்டாட்டமாக இருக்கலாம். சுண்ணாம்பு காரை அனைத்து நடு கற்களின் மேற்பரப்பிலும், சுண்ணாம்பு காரை பூசப்பட்டுள்ளது. இது, பிற்காலத்தில் பூசப்பட்டதாக இருக்கலாம். இதனால், அந்த கற்களில் எழுத்துக்கள் ஏதும் இருந்தனவா என்பதை கணிக்க முடியவில்லை. ஏற்கனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டு, 14ம் நுாற்றாண்டு என, காலக்கணிப்பு செய்யப்பட்ட, நடு கற்களை போலவே இருப்பதால், இவையும் அக்காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம்.

நல்லுார்வாசிகள் கூறும்போது, குறிப்பிட்ட இனத்தை சேர்ந்தோர், ஆண்டுக்கு ஒருமுறை அக்கற்களை வணங்குவதாக கூறினர். நடு கற்களுக்காக, அவர்கள் எழுப்பி இருக்கும், மண் சுவர்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்த, பலகை கற்களும் காணாமல் போய் உள்ளன. சில நடு கல் பகுதிகளில், புதையலுக்காக தோண்டப்பட்டிருப்பதையும் காண முடிகிறது. வரலாற்று சிறப்புமிக்க, இந்த இடங்களை ஆய்வு செய்து, ஆவணப்படுத்தி பாதுகாக்க, தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: