மன்னர் சேதுபதி காலத்தை சேர்ந்த சூலக்கல் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

மன்னர் சேதுபதி காலத்தை சேர்ந்த சூலக்கல் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

மன்னர் சேதுபதி காலத்தை சேர்ந்த சூலக்கல் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே மேல அரும்பூர் பகுதி கூத்தப்பெருமாள் அய்யனார் கோயில் குளக்கரையில், மன்னர் சேதுபதி காலத்தை சேர்ந்த இரு சூலக்கல் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


ராமநாதபுரம் திருவாடானை அருகே மேல அரும்பூர் கூத்தப் பெருமாள் அய்யனார் கோயிலில் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் வே.ராஜகுரு, ஒருங்கிணைப்பாளர் மோ. விமல்ராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர். அங்குள்ள குளக்கரையில் கல்வெட்டுடன் கூடிய சூலக்கல் இருந்தது. வே.ராஜகுரு தெரிவித்ததாவது:

மேல அரும்பூரில் இருந்த சூலக்கல், புல்லுகுடி சிவன் கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலத்தில் இருந்தது. 2.5 அடி நீளமும், ஒரு அடி அகலமும் உள்ள கல்லின் நடுவில் திரி சூலமும், அதன் இடது, வலது புறங்களில் சூரியனும், பிறையும் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளன. இந்தக் கல்லின் நான்கு புறத்திலும் கல்வெட்டுக்கள் காணப்பட்டன. மன்னர்கள் கோயில்களில் தினசரி வழிபாடு நடை பெறுவதற்காக விளை நிலங்களின் மீது விதிக்கப்படும் வரியை நீக்கி, கோயில்களுக்கு தானமாக வழங்குவார்கள். இந்த விளை நிலங்களில் கிடைக்கும் வருமானத்தை வைத்து கோயில்களில் வழிபாடு தொடர்ந்து நடை பெறும். அவ்வாறு தானமாக வழங்கிய நிலங்களின் மூலைகளில் எல்லைக்கல் நட்டு வைப்பார்கள். சிவன் கோயிலுக்கு வழங்கப்பட்ட நிலத்தில் உள்ள கல்லில் திரிசூலமும், திருமால் கோயிலுக்கு சங்கு, சக்கரம் பொறித்த கல்லும் நடுவார்கள். கி.பி.1711 முதல் கி.பி., 1725 வரை சேது நாட்டை ஆண்ட முத்துவிஜயரகுநாத சேதுபதியின் பெயரால் விளத்துார் திருவினாபிள்ளை என்பவர் புல்லுகுடியில் உள்ள கயிலாச நாத சுவாமி கோயிலுக்கு, அரும்பூர் பகுதியில் நிலத்தை தானமாக வழங்கியுள்ளார். இதனை செப்பு பட்டயமாக மந்திரி எழுதிக்கொடுத்துள்ளார், என்ற செய்தி கல்வெட்டில் உள்ளது. கல்வெட்டில் தானமாக கொடுத்த நிலங்களின் விபரங்கள் இல்லை. சூலக்கல் உள்ள நிலம் தானமாக வழங்கப்பட்டதாக கொள்ளலாம். இதில் விகாரி தமிழ் ஆண்டு, தை மாதம் 26 ம் தேதி வழங்கப்பட்டுள்ளது. இதன் ஆங்கில ஆண்டு கி.பி.1720 ஆகும். ஸ்ரீமது என தொடங்கும் இக்கல்வெட்டு, சந்திராதித்தவருக்கு, என முடிகிறது. இக்கல்வெட்டில் 32 வரிகள் உள்ளன. இரண்டு மூன்று எழுத்துக்கள் ஒரு வரியாக உள்ளது. சேதுபதிகள் காலத்தை சேர்ந்த முதல் சூலக்கல் கல்வெட்டு என்பது குறிப்பிடத்தக்கது. சோழர் கால சூலக்கல் இதே போல் மேல அரும்பூர் உத்தம பாண்டீஸ்வரர் கோயில் பின்புறம் ஒன்றும், கருப்பசாமி கோயில் குளத்தில் ஒன்றுமாக இரு சூலக்கற்கள் உள்ளன. சோழர் கால கலையமைப்பில் உள்ளன. புல்லுகுடி சிவன் கோயிலுக்கு பிற்காலச் சோழர் காலத்தில் நிலதானம் வழங்கப்பட்டு, எல்லையாக சூலக்கற்கள் நடப்பட்டிருக்கலாம். இதில் கல்வெட்டுக்கள் எதுவும் இல்லை, என அவர் தெரிவித்தார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: