நாகை மாவட்டம், குத்தாலம் அருகேயுள்ள கோனேரிராஜபுரம் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீசர்வமங்கள மோகனகுஜாம்பிகா சமேத ஸ்ரீகயிலாசநாத சுவாமி ஆலய ஜீர்ணோத்தாரன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நாளை மறுநாள் (மே 10-ம் தேதி) வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.
தேவாரம் பாடிய நாயன்மார்கள் மூவரால் நாவாரப் பாடல்பெற்ற பல தலங்களுக்கு மத்தியில் சிறப்பு மிக்க கிராமம் கோனேரிராஜபுரம். கி.பி.1117 -ம் ஆண்டு முதலாம் குலோத்துங்க சோழனால் திருப்பணி செய்யப்பட்டது. காலப் போக்கில் சிதிலமடைந்துவிட்ட ஆலயத்துக்குக் கடந்த நூறு வருடங்களாகவே திருப்பணிகள் நடைபெறவில்லை. குடமுழுக்கு நடைபெறவில்லை.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
நித்திய பூஜைகள் கூட நடைபெறாமல் இருந்தது. மேலும், பாம்புப் புற்றுடன் கூடிய அம்பாள் சந்நிதி மட்டும்தான், இந்தத் திருக்கோயில் இருந்ததற்கான சாட்சியாக இருந்தது. எனவே, கிராமவாசிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த ஆலயத்துக்கு குடமுழுக்கு செய்ய திட்டமிட்டனர்.
அதன்படி ஸ்ரீகயிலாசநாதர் பெருமான், ஸ்ரீசர்வ மங்கள மோகனகுஜாம்பிகையுடன் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீதிருச்செந்தூர் செந்தில்வேலன், ஸ்ரீநர்த்தன விநாயகர், ஸ்ரீரகுமாயி சமேத பாண்டுரங்க சுவாமி, ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீபைரவர், ஸ்ரீநாகர், நந்தி, பலிபீடம் ஆகிய மூர்த்தங்களுக்கு தனித்தனிச் சந்நிதிகள் அமைத்து பெருமானுக்கு கர்ப்பகிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், சுற்றுச்சுவர் இவற்றுடன் பஞ்சவர்ண கலாபங்கள் தீட்டச்செய்து பூரணமாகத் திருப்பணியை பூர்த்தி செய்துள்ளனர். இந்தக் கோயிலின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நிகழும் ஸ்ரீவிகாரி வருடம், சித்திரை மாதம் 27-ம் தேதி (10.5.19) வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்குமேல் 10.00 மணிக்குள் நடைபெறுகிறது.