கண்ணகி கோவிலில் புதிய கல்வெட்டு கண்டுபிடிப்பு!

கண்ணகி கோவிலில் புதிய கல்வெட்டு கண்டுபிடிப்பு!

கண்ணகி கோவிலில் புதிய கல்வெட்டு கண்டுபிடிப்பு!

மங்கலதேவி கண்ணகி கோயிலில் புதிய தமிழ்க் கல்வெட்டை புதன்கிழமை (10/05/2017) அன்று மங்கலதேவி அறக்கட்டளையினர் கண்டறிந்தனர்.

கோயிலுக்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பக்தர்களையும் பொது மக்களையும் கேரள வனத்துறை அனுமதிக்கின்றனர். இதனால் சித்ரா பவுர்ணமி விழா நடைபெறும் சமயத்தில், கோயில் வளாகத்தில் உள்ள கல்வெட்டுகள் மற்றும் சிற்பங்களை தமிழ் ஆராய்சியாளர்கள், தொல்லியல் துறை ஆய்வாளர்கள், இலக்கியத் துறை ஆர்வலர்கள் ஆய்வு செய்து, படி எடுக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், புதன்கிழமை (10/05/2017) சித்ரா பௌர்ணமி விழா ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்த போது, கம்பம் மங்கலதேவி கண்ணகி கோயில் அறக்கட்டளையினர் வடக்கு தோரண வாயில் பகுதியில் புதிய கல்வெட்டு ஒன்றை கண்டறிந்தனர்.

தமிழகப் பகுதியில் இருந்த இக்கல்வெட்டில் தமிழ் எழுத்துக்களால் எழுதப்பட்டிருந்தது. இந்த கல்வெட்டு இதுவரை மண்ணிற்குள் இருந்தாகவும், மண் சரிந்ததால் கல் தற்போது வெளிய தெரிய வந்துள்ளதாகவும் அறக்கட்டளையினர் தெரிவித்தனர். இந்த கல்வெட்டு குறித்து வரலாற்று அறிஞர்கள், தொல்லியல் துறையினரிடம் தெரிவித்து புதிய தகவல்களை எதிர்பார்த்து இருப்பதாக மேலும் தெரிவித்தனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>