கற்பனைக்கு எட்டாத கழுகுமலை சிற்பங்கள்!

கற்பனைக்கு எட்டாத கழுகுமலை சிற்பங்கள்!

கற்பனைக்கு எட்டாத கழுகுமலை சிற்பங்கள்!

கழுகுமலை, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். கழுகுமலையில் புகழ்பெற்ற கழுகுமலை வெட்டுவான் கோயில், கழுகுமலை முருகன் கோயில் மற்றும் கழுகுமலை சமணர் படுகைகள் அமைந்துள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


அஜந்தா எல்லோரா குகை ஓவியங்கள் உலக பிரசித்தி பெற்றவை. அந்த வரிசையில் பண்டையை தமிழர்களின் கலாச்சாரம் பாரம்பரியம் கட்டடக்கலை நுட்பத்தை பறைசாற்றி நிற்கிறது கழுகுமலை. தூத்துகுடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலை முன்பு அரைமலை என அழைக்கப்பட்டது. புராதான சின்னங்கள் நிறைந்த இம்மலையில் பல அற்புதங்கள் பொதிந்து காணப்படுகின்றன.

செந்நிற பாறைகளால் ஆன கழுகு மலையின் கிழக்கில் வெட்டுவான் கோயில் தமிழர்களின் கல்வெட்டு திறனை மெய்ப்பித்து வருகிறது. பார்ப்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது. வெட்டுவான் கோயில் எல்லோராவில் உள்ள கைலாச நாதர் கோயிலைப் போன்றது. இது பெரிய மலைப்பாறையின் கீழ் நோக்கி செங்குத்தாக ஏறக்குறைய 7.05 மீட்டர் ஆழத்திற்கு சதுரமாக குடைந்தெடுத்து அதன் நடுப்பகுதியை கோயிலாக செதுக்கியுள்ளனர்.

கற்பனைக்கு எட்டாத கலை நயமிக்க வெட்டுவான் சிற்பக்கோயில் பாண்டிய மன்னர் பராந்தக நெடுஞ்சடையானால் கி பி 8ம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டது. இந்த குடவரை கோயில் முற்றுப்பெறவில்லை. எனினும் கோபுரம் மட்டும் முற்றுப்பெற்றுள்ளது. கருவறையும் அர்த்த மண்டபமும் கம்பீரமாக தமிழர்களின் சிற்பக்கலை நுட்பத்தை காலங்காலமாக பறைசாற்றி வருகிறது.

கழுகு மலையின் தென்புறம் சமணத் தீர்த்தங்கரர்களின் கலை நயமிக்க சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சமணர்கள் தங்கள் குரு தாய் தந்தை மகன் ஆகியோரின் நினைவாக இங்கு தீர்த்தங்கள் சிற்பங்கள் உருவாக்கியுள்ளனர். இவற்றின் எழுத்துக்கள் வட்டெழுத்தாக பொறிக்கப்பட்டுள்ளன. இச்சிற்பங்களையும் மலையைக் குடைந்து கோயில் கோபுரம் அமைத்த வெட்டுவான் கோயில் அழகையும் காண கண் கோடி வேண்டும். வரலாற்று சிறப்புமிக்க கழுகுமலை கம்பீரமாக நிற்கிறது.

அஜந்தா எல்லோரா குகை ஓவியங்களை பார்த்தவர் ஏராளம். ஆனால் உலகிலேயே காணாத அற்புதமாக 1200 ஆண்டுகளுக்கு முன்பு கடினமான மலைப்பாறையை செங்குத்தாக குடைந்து கோபுரம் அமைத்து கோயில் வடித்த பண்டைய தமிழர்களின் மதி நுட்பத்தை என்னென்று பாராட்டுவது? சந்திரனும் சூரியனும் உள்ளவரை பூமியில் தமிழர்களின் பண்பாடும் பாரம்பரியமும் நிலைத்து நிற்கும் என்பதற்கு கழுகுமலை ஒரு சாட்சி.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>