திருப்பூர் மாவட்டத்தில், இரண்டு இடங்களில் பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு!

திருப்பூர் மாவட்டத்தில், இரண்டு இடங்களில் பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு!

திருப்பூர் மாவட்டத்தில், இரண்டு இடங்களில் பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு!

திருப்பூர் மாவட்டத்தில், இரண்டு இடங்களில், பழமையான இரு கல்வெட்டுகளை, தொல்பொருள் ஆராய்ச்சியாளர் குழுவினர் கண்டறிந்தனர். திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் அமராவதி ஆற்றில் பெரிய பாறையின் மீதுள்ள கல்வெட்டினை, கோவை கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சுந்தரம், உடுமலை வரலாற்று ஆய்வாளர் சதாசிவம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


சிறு, சிறு பாறைகளுக்கு இடையில், பெரிய பாறைப்பரப்பின் மீது ஐந்து வரிகளை கொண்டதாக கல்வெட்டு அமைந்துள்ளது. பழங்கால கல்வெட்டு எழுத்துகளான வட்டெழுத்து, தமிழ் எழுத்து ஆகிய இரு எழுத்துகளும் கல்வெட்டில் காணப்படுகின்றன.கல்வெட்டின் இடது பக்கத்தில், ஒரு சில வட்டெழுத்துகளும், வலது பக்கத்தில் தமிழ் எழுத்துகள் ஐந்து வரிகளில் உள்ளன. தமிழ் எழுத்துகள், கி.பி., 13ம் நுாற்றாண்டில் கொங்குச் சோழர்கள் ஆட்சி செய்த காலத்து எழுத்துகளை ஒத்திருப்பதால், கல்வெட்டின் காலம் கி.பி.,13ம் நுாற்றாண்டு என கருதலாம்.

தமிழ் எழுத்துகளிலிருந்து, கல்வெட்டின் முழுமையான பொருளை அறிய முடியவில்லை. ஊரின் முன்பகுதி தெரியவில்லை. பின்பகுதி ‘ஆற்றுார்’ என தெரிகிறது. இந்த ஊரினர் செய்த ஒரு செயலை பற்றி கல்வெட்டு பொறிக்கப்பட்டிருக்கலாம். அச்செயல் இன்னதென்று அறிய முடியாதவாறு கல்வெட்டினை தொடங்கிவிட்டு அரைகுறையாக முடிக்காமல் விட்டிருக்கலாம். கல்வெட்டினை ஆற்றுக்கு நடுவில் பாறையின் மீது பொறிக்க காரணம் என்ன என்பது ஆய்வுக்குரியது. இவ்வாறு, கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சுந்தரம் கூறினார்.

துாரிக் கல்வெட்டு! திருப்பூர் மாவட்டம், பொங்கலுார் ஒன்றியம் காட்டூர்புதுார் கருப்பராயன் கன்னிமார் கோவிலின் அறங்காவலர் குழுவை சேர்ந்த சவுந்தரராஜன் கொடுத்த தகவலின் படி, தொல்பொருள் ஆராய்ச்சியாளர் சுந்தரம் கல்வெட்டினை ஆய்வு செய்தார்.

அவர் கூறியதாவது: காட்டூர்புதுார் கருப்பராயன் கன்னிமார் கோவிலின், கருவறைக்கு முன், கல்லாலான துாரி உள்ளது. ஐந்து அடி உயரத்துக்கு இரண்டு கல் துாண்கள்; அவற்றை மேற்பகுதியில் இணைக்கும் ஒரு கிடைமட்டக் கல். இரும்பு சங்கிலிகளில் பிணைக்கப்பட்ட ஊஞ்சல் மரப்பலகை. இந்த அமைப்பின் இரு துாண்களிலும் கல்வெட்டு எழுத்துகள் காணப்பட்டன. கல்வெட்டு, துாணின் அரை அடி அகலப்பரப்பில் எழுதப்பட்டிருந்தன. மூன்று அல்லது நான்கு எழுத்துகளே பெரும்பாலும் எழுதப்பட்டிருந்தன. இரு துாண்களிலும், தலா 28 வரிகள் எழுதப்பட்டிருந்தன. பிள்ளையார் சுழியுடன் தொடங்கப்பட்ட கல்வெட்டில், பஞ்சாங்க தேதி தமிழ் ஆண்டின் பெயர் உள்ளிட்ட விவரங்களுடன் எழுதப்பட்டுள்ளன. கல்வெட்டில் கலியுக ஆண்டு, 4,930 என குறிக்கப்படுவதால்; இதற்கு ஈடான ஆங்கில ஆண்டு, 1,829 ஆகும். எனவே, கல்வெட்டின் காலம் கி.பி., 1829. பழமையான கல்வெட்டு, 188 ஆண்டுகளுக்கு முந்தையது.

கல்வெட்டில் இருக்கும் ஆண்டு தமிழ் ஆண்டான நந்தன ஆண்டுக்குரியது, ஆங்கில ஆண்டுடன் பொருந்தவில்லை. கோவிலிலுள்ள கருப்பராயன், கன்னிமார் தெய்வங்களின் சிற்பத் திருமேனிகளையும், கல் துாரி என இந்த மூன்றையும் காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் நிறுவியுள்ளனர். அவர்களது குலக்கோவிலாகும்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: