செப்.30 வரை கீழடியில் அகழாய்வு பணி நடைபெறும் : தொல்லியல் அதிகாரிகள் தகவல்!

செப்.30 வரை கீழடியில் அகழாய்வு பணி நடைபெறும் : தொல்லியல் அதிகாரிகள் தகவல்!

செப்.30 வரை கீழடியில் அகழாய்வு பணி நடைபெறும் : தொல்லியல் அதிகாரிகள் தகவல்!

கீழடியில் வரும் செப்.30 வரை அகழாய்வு பணிகள் நடைபெறும் என தமிழ்நாடு தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தை திடலில் கடந்த 2015ம் ஆண்டில் மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் துவங்கின. இதுவரை 3 கட்ட அகழாய்வு பணிகள் நடந்துள்ளன. இந்த ஆய்வில் 7 ஆயிரத்து 600 தொல்லியல் பொருட்கள் கிடைத்தன. மேலும் உறை கிணறுகள், கழிவுநீர் கால்வாய்கள் ஆகியவற்றை பண்டைய தமிழர்கள் பயன்படுத்தி வந்தனர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் ஆய்வில் ஈடுபட்ட மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத்தை மத்திய அரசு பணியிட மாற்றம் செய்தது.

இதனால் கீழடி அகழாய்வை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுப்பதாக கூறி, பல்வேறு தமிழ் அமைப்புகளும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலை இலக்கிய அமைப்பினரும் போராட்டங்களை நடத்தினர். ஆனால் மத்திய தொல்லியல் துறையினர் 4ம் கட்ட ஆய்வை துவக்கவில்லை. இதனையடுத்து தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்வு செய்ய முன் வந்தது. இதற்கு மத்திய தொல்லியல் துறையும் அனுமதி அளித்தது. தமிழக அரசும் ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. ஆனால் அகழாய்வின் போது வெட்டப்படும் தென்னை மரங்களுகு–்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தினர். இதனால் கடந்த ஜனவரி மாதம் துவங்க வேண்டிய ஆய்வு பணிகள் தாமதமானது.

இந்நிலையில் நேற்று முன்தினம் 4ம் கட்ட அகழாய்வுக்கான பூமிபூஜை நடந்தது. ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் பகுதியில் ஆய்வில் ஈடுபட்ட தமிழக தொல்லியல் துறை அலுவலர்களே, தற்போது கீழடி அகழாய்வை தொடர்கின்றனர். வரும் செப்.30 வரை கீழடியில் அகழாய்வு நடைபெறும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். அகழாய்வு பணிகளுக்கு விவசாயிகள் நிலம் வழங்க மறுத்து வந்த நிலையில் கொந்தகையை சேர்ந்த முதியவர் சோணை (80), தனக்கு சொந்தமான 2.5 ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளார். விவசாயி சோணை கூறுகையில், ‘‘கீழடியில் நடந்த அகழாய்வு மூலம் தமிழர்களின் தொன்மையான நாகரிகம், கலாசாரம் உலகுக்கு தெரிய வந்தது. இந்த பணிகள் தொடர வேண்டும் என்ற ஆர்வத்தில், எனது நிலத்தை ஆய்வுக்கு வழங்கினேன்’’ என்றார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: