“முன்னேறுவதை நிறுத்துங்கள் அல்லது ஆபத்தான விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும்” என வெளிப்படையாக விடுதலைப்புலிகளை அச்சுறுத்தியவர்தான் இந்த வாஜ்பாய்.
யாழ்ப்பான தீபகற்பத்திலிருந்து 17 ஆண்டுகளாகப் பிரித்து வைத்திருந்த ஆனையிறவு கணவாயை விடுதலைப்புலிகள் கைப்பற்றினர். யாழ்ப்பாணத்தில் இருந்த 40,000 சிங்கள இராணுவத் துருப்புகள் விடுதலைப் புலிகளால் சுற்றி வளைக்கப்பட்டு அழிக்கப்படும் ஆபத்தான சூழலில் இருந்தனர். சரணடைவது அல்லது அழித்தொழிக்கப்படுவது தவிர வேறு வழிகள் சிங்கள இராணுவத்திற்கு இல்லை!
(பட விளக்கம் : 23-04-2000ம் ஆண்டு வி.புலிகளின் தலைவர் கேனல் பானு அவர்கள் ஆனையிறவு கணவாயின் வெற்றியை குறிக்க கொடியேற்றினார்.)
அப்பொழுதைய இலங்கை அதிபர் சந்திரிகா கேட்டுக் கொண்டதன் பேரில் இந்தியா மற்றும் அமெரிக்கா அரசுகளின் தலையீட்டினால் மட்டுமே இது நிறுத்தப்பட்டது.
அப்போதைய வாஜ்பாய் அரசாங்கமானது “முன்னேறுவதை நிறுத்துங்கள் அல்லது ஆபத்தான விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும்” என வெளிப்படையாக விடுதலைப்புலிகளுக்கு அச்சுறுத்தல்விடுத்தது நாமெல்லாம் எளிதாக மறந்து போனோம்.
சிங்கள இராணுவத்தினரைக் காப்பாற்ற இந்திய கடற்படையின் விமானந்தாங்கி கப்பல்களை கொச்சி கப்பற்படை தளத்தில் இருந்து இலங்கையை நோக்கி வாஜ்பாய் அரசாங்கம் அனுப்பியது.
இப்படியாக சிங்கள இராணுவத்தினை அன்று காப்பாற்றி ஈழம் அமையாமல் தடுத்தது வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு.
இவருடைய இறப்புக்குத்தான் திராவிட தலைவர்கள் என கூறிக்கொண்டுள்ள சிலர் டெல்லி சென்று நேரில் அஞ்சலி செலுத்தினர். அதிலும் தெலுங்கு வைகோ, தன்னை பெறாத மகனென்று வாஜ்பாய் கூவி பிதற்றிக் கொண்டதை பார்க்கும்போது, இவர்களது இனப்பற்றை அறிய முடிகிறது.
ஆனையிறவு கணவாயை அன்று வெற்றிபெற்றிருக்குமேயானால், ஈழம் அப்பொழுதே மலர்ந்திருக்கும்!