கீழடி ஏழாம் கட்ட அகழாய்வில் அகரத்தில் நுண் கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகையில் 7ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. இங்கு தலா 8 குழிகள் வரை தோண்டப்பட்டுள்ளன. அகரத்தில் தோண்டப்பட்ட குழிகளில் விலங்கு உருவ பொம்மை, பானைகள், பானை ஓடுகள், தலையலங்கார பொம்மை, சுடுமண் அச்சு, தந்த மோதிரம் உள்ளிட்டவைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கீழடியில் நெசவு தொழில் நடந்ததற்கு சான்றாக தக்கழி, சுடுமண் ஊசி, நெசவு தொழில் சக்கரம், நூல் நூற்பு கருவி உள்ளிட்டவை கண்டறியப்பட்டன. அகரத்திலும் முதன் முதலாக நூற்பு கதிர், மைக்ரோ லித்திக் எனப்படும் நுண் கற்கால கருவி உள்ளிட்டவை கண்டறியப்பட்டன. எனவே கீழடி, அகரம் ஆகிய இரண்டு இடங்களிலும் நெசவு தொழில் நடந்திருக்கலாம் அல்லது அகரத்தில் நூல்களை நெய்து அதனை கீழடிக்கு கொண்டு சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது.
அகரம் அகழாய்வில் நுண்கருவிகள் கண்டெடுப்பு
நன்றி : தினகரன்