கொடும் சித்திரவதைக்குப் பிறகு கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் தளபதி ரமேஷ்!

கொடும் சித்திரவதைக்குப் பிறகு கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் தளபதி ரமேஷ்!

கொடும் சித்திரவதைக்குப் பிறகு கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் தளபதி ரமேஷ்!

கொக்கட்டிச்சோலை அரசடித்தீவை பிறப்பிடமாகக் கொண்ட துரைராஜசிங்கம் தம்பிராஜா – தளபதி ரமேஷ் 1986 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து தளபதியாக பணியாற்றியிருந்தார்.

இந்நிலையில் இறுதி யுத்தகாலத்தில், தான் அவமானப்படுத்தப்பட்டு, கோரமாக கொல்லப்படுவேன் என தெரிந்தும், கழுத்தில் கிடந்த சயனைட் குப்பியை கழற்றி எறிந்துவிட்டு, தலைவனின் கட்டளையை ஏற்று எதிரிகளின் பாசறையை நோக்கி வெள்ளைக் கொடியுடன் சென்றார் தளபதி ரமேஷ்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


விடுதலைப்புலிகள் இயக்க கிழக்குப் பகுதி தளபதியாக இருந்த கர்னல் ரமேஷை இலங்கை ராணுவம் கொலை செய்தது பற்றிய காணொளி ஆதாரம் கிடைத்துள்ளது.

இலங்கை இறுதி போரின் போது அவர் ராணுவத்திடம் சரணடைந்தார். ஆனால் அவரை இலங்கை ராணுவத்தினர் கொலை செய்து பிணத்தை தெருவில் வீசினார்கள். அவர் சரண் அடைந்த பிறகு ராணுவத்தினர் அவரிடம் விசாரிக்கும் புகைப்படங்கள், காணொளிகள் ஏற்கனவே வெளியாகி இருந்தன.

அவரிடம் விசாரணையை முடித்து விட்டு பின்னர் சித்ரவதை செய்து கொன்றுள்ளனர். ரமேசை கொல்வதற்கு முன்பு அவரிடம் விசாரணை நடத்திய இன்னொரு காட்சி வெளியாகி உள்ளது. அதில் ரமேஷ் ராணுவத்தினரின் பிடியில் இருக்கும் போது சாதாரண உடையில் இருக்கிறார். பின்னர் அவரை கட்டாயப்படுத்தி ராணுவ உடையை அணிய வைக்கின்றனர். அடுத்து தரையில் உட்கார வைத்து சிங்கள வீரர்கள் சுற்றி நின்று அவரிடம் விசாரிக்கிறார்கள்.

அதிகாரி ஒருவர் ஆங்கிலத்தில் ரமேஷிடம் கேள்வி கேட்கிறார். அதற்கு அவர் பதில் அளிக்கிறார். ரமேஷ் பிறந்த தேதி, பிறந்த ஊர், விடுதலை புலிகள் இயக்கத்தில் சேர்ந்த நாள், அவருடைய மனைவி, குழந்தைகள், பிரபாகரனுடைய மனைவி ஆகியோரை பற்றி ரமேஷிடம் விசாரிக்கிறார்.

கடைசியில் ரமேசுடன் ராணுவ அதிகாரி கடும் கோபத்தில் ஏதோ பேசுகிறார். அதன் பிறகு காட்சி நின்றுவிடுகிறது. எனவே அந்த விசாரணை முடிந்ததும் அவரை சித்ரவதை செய்து கொன்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அவரது பிணம் ஒரு குடிசை எதிரே கிடந்தது. அவருடைய முகம் கோரமாக சிதைக்கப்பட்டிருந்தது. எனவே இந்த காட்சிகள் மூலம் சிங்கள ராணுவத்திடம் சரணடைந்த பலரும் இதேபோல கோரமாக கொல்லப்பட்டது உறுதியாகி இருக்கிறது.

கடந்த 2009 மே 18 ஆம் நாள் அதிகாலை முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்த இளநிலை தளபதிகள் இருவர் தமது இறுதிநேர தொலைபேசி அழைப்புக்களை எடுத்திருந்தனர். அந்த அழைப்பின் முடிவில் அவர்கள் கூறியது இது தான். “எமக்கு நீங்கள் செய்த உதவிகளுக்கு நன்றிகள், அதேபோலவே போராட்டத்தை தொடருங்கள்” “நாம் சயனைட் சாப்பிட்டு வீரமரணத்தை தழுவ திட்டமிட்டுள்ளோம்” “புலிகளின் தாயகம் தமிழீழ தாயகம்” இந்த வசனங்களுக்கு பின்னர் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.

இன்று வரை அவர்கள் தொடர்பான தகவல்கள் இல்லை, எனவே அவர்கள் சயனைட் சாப்பிட்டு வீரமரணத்தை தழுவியிருக்கலாம். இதனை ஏன் இங்கு தெரிவிக்கிறேன் என்றால், அதேபோல தன்னிடம் இருந்த சயனைட்டை உட்கொண்டு உயிரை விடுவதற்கு பிரிகேடியர் ரமேஷ்-ற்கு பத்து நொடிகள் போதுமானது.

எனினும் தலைமையின் கட்டளையை அவர் மீறவில்லை, காயமடைந்த பெருமளவான போராளிகளை சரணடைய வைத்து, அவர்களின் பாதுகாப்பை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் தொண்டர் அமைப்புக்கள் மூலம் உறுதிப்படுத்தும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவருக்கு உதவியாக விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் திரு. பா. நடேசனும், சமாதானச் செயலாகப் பணிப்பாளர் திரு. சி. புலித்தேவனும் அனுப்பப்பட்டிருந்தனர்.

காயமடைந்த போராளிகளுக்கு பொறுப்பாக சென்றவர்களும், காயமடைந்த போராளிகளும், சரணடைந்த ஏனைய போராளிகளும் படுகொலை செய்யப்பட்டால் அதனை போர்க்குற்றமாக கொண்டு வரும் நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டன. ஐக்கிய நாடுகள் சபைக்கு அறிவிக்கப்பட்டது, ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனின் ஆலோசகர் விஜய் நம்பியாரின் கவனத்திற்கும் சரணடையும் நிகழ்வுகள் கொண்டுவரப்பட்டன.

ஐ.நாவுக்கான சிறீலங்காவின் பிரதிநிதி பாலித கோகன்னாவிடமும் அது தெரிவிக்கப்பட்டு, பசில் ராஜபக்சா ஊடாக சரணடையும் நடைமுறைகள் கேட்டறியப்பட்டன. தமிழ் தேசியத்தின் மீது பற்றுக்கொண்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சரணடையும் நிகழ்வுகள் அறிவிக்கப்பட்டன. கொழும்பில் உள்ள வெளிநாடுகளின், குறிப்பாக மேற்குலகத்தின் தூதரகங்களுக்கும் அவை தெரியப்படுத்தப்பட்டன. பிரித்தானியாவில் உள்ள த ரைம்ஸ் நாளேட்டின் ஊடகவிலாளருக்கும் சரணடைந்ததற்கான ஆதரங்கள் வழங்கப்பட்டன.

அதன் பின்னர்தான் சரணடையும் நிகழ்வுகள் இடம்பெற்றன. சரணடைந்த போராளிகளும், காயமடைந்த போராளிகளும் கோரமாக படுகொலை செய்யப்பட்டனர், திரு. பா. நடேசனும், அவரின் மனைவியும், சி. புலித்தேவனும் சரணடையும்போதே சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பிரிகேடியர் ரமேஷ் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் அடித்துக் கொல்லப்பட்டார். சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா வழங்கிய உத்தரவுகளுக்கு அமைவாக 58-ஆவது படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் சிவேந்திர சில்வா இந்த படுகொலைகளை தலைமை தாங்கி மேற்கொண்டிருந்தார்.

அது மட்டுமல்லாது முள்ளிவாய்க்கால் பகுதியை சுற்றிவளைத்து நின்ற, 53-ஆவது படையணி, 59-ஆவது படையணி, 55-ஆவது படையணி, நடவடிக்கை படையணி எட்டு உட்பட பல சிறப்பு படையணி பிரிவுகளும் தம்மிடம் நாற்புறமும் சரணடைந்த போராளிகளையும், பொதுமக்களையும் கோரமாக படுகொலை செய்தனர். நாலாவது ஈழப்போர் என்பது இறுதிப்போர் எனவும், அதில் 50,000 இற்கு மேற்பட்ட மக்களை சிறீலங்கா அரசு படுகொலை செய்யலாம் எனவும் விடுதலைப்புலிகள் முன்னரே எதிர்வு கூறியிருந்தனர்.

ஆனால் அவர்களின் கணிப்புக்கள் இது தான் என்பதை யாரும் கணிப்பிடவில்லை. எனினும் தமது கணிப்புக்களை உறுதிப்படுத்திக் கொண்ட விடுதலைப்புலிகள் சிறீலங்கா அரசின் இந்த நடவடிக்கைகளை போர்க்குற்றம், மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படு கொலையாக வெளி உலகிற்கு கொண்டுவரும் நடவடிக்கைகளையே முதன்மைப்படுத்தியிருந்தனர். சிறீலங்கா அரசிடம் சரணடைபவர்களுக்கு என்ன நடைபெறும் என்பதை தனது மரணத்தின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார் பிரிகேடியர்; ரமேஷ். அவரின் தியாகமும் திலீபனின் தியாகத்தை போன்றதே.

ஆனால் தனக்கு மிகவும் அவமானமானதும், கோரமானதுமான மரணம் சம்பவிக்கும் என்பதை அறிந்தும், என்ன நோக்கத்திற்காக பிரிகேடியர் ரமேஷ் சரணடைந்து வீரமரணத்தை தழுவினார்.

1986 ஆம் ஆண்டு தலைவரின் நம்பிக்கையின் சூரியனாக தமிழீழ விடுதலைப் பாதையில் தன்னை இணைத்து ஒரு சிறந்த தளபதியாக எமது மண்ணில் வீர முரசிட்டவரே எம் தளபதி ரமேஷ்.

1987 களில் சிறீலங்காவுக்குள் வந்திறங்கிய இந்திய அமைதிகாக்கும் படையினர் காந்தியின் விம்பங்களை முகமூடிகளாக அணிந்து, அமைதியின் சின்னங்களாக தம்மை காண்பிக்க முயன்றனர். ஆனால் அவர்களின் உண்மையான நோக்கம் என்ன, அவர்களின் ஜனநாய செயற்பாடுகள் என்ன? ஜனநாயக போராட்டங்களுக்கு காந்தி தேசம் கொடுக்கும் மதிப்பு என்ன? காந்தீயம் தற்போதும் இந்தியாவில் உயிர் வாழ்கின்றதா? என்பதற்கான விடைகளை தியாக தீபம் திலீபனின் உண்ணாநிலை போராட்டம் வெளிக் கொண்டு வந்திருந்தது.

நீர் கூட அருந்தாது போராடிய திலீபன் துடி துடித்து உயிரைத்துறந்து இந்தியாவின் ஜனநாயக முகமூடியை தகர்த்திருந்தார். அன்று திலீபன் மேற்கொண்ட முதல் தகர்ப்புத் தான் பின்னர் விடுதலைப்புலிகளின் போரை இலகுவாக்கியதுடன், தமிழ் மக்களை விடுதலைப்புலிகளின் பின்னால் அணிதிரளவும் வைத்திருந்தது.

தமிழ் மக்களின் விடுதலைப்போரை நகர்த்துவதில் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட தியாகங்களில் பல அற்புதங்கள் உண்டு. உலகில் யாரும் அதற்கு இணையாக முடியாது. நல்லூர் முதல் ஜெனீவா வரை அதன் சுவடுகளை நாம் காணலாம் அது வரலாறும் கூட.

தளபதி ரமேஷ்-யின் மரணமும் திலீபனின் மரணம் போன்றதே, தான் அவமானப்படுத்தப்பட்டு, கோரமாக கொல்லப்படுவேன் என தெரிந்தும், கழுத்தில் கிடந்த சயனைட் குப்பியை கழற்றி எறிந்துவிட்டு, தலைவனின் கட்டளையை ஏற்று எதிரிகளின் பாசறையை நோக்கி வெள்ளைக் கொடியுடன் சென்றார் தளபதி ரமேஷ்.

எமது விடுதலைக்காய் எம் வருங்கால சந்ததிக்காய் இத்தகைய தியாகத்தை அந்த நொடியில் அந்த தருணத்தில் எமது தேசியத் தலைவரின் கட்டளைக்கு அமைய செயல் வடிவம் கொடுத்தவரே தளபதி ரமேஷ். சக போராளிகளுடனும் எம் உறவுகளுடனும் பழகும் போது தான் ஒரு தளபதி என்ற இறுமாப்பு இல்லாத சாதாரண போராளியாகவே பழகும் குண இயல்பு உடையவர்.

விடுதலைப் போராடத்தில் அகலப் பதிந்து தனது தமிழீழ மண்மீது கொண்ட காதல்,பற்று, எல்லாவற்றையும் முள்ளிவாய்க்கால் மண்ணில் சர்வதேசத்துக்கே உறுதி செய்து கொண்ட தளபதி ரமேஷ் அண்ணா. எங்கள் இதயக்கதவுகளை இறுகப்பூட்டி உங்களை எம் நெஞ்சுக்குள் பத்திரமாக வைத்துள்ளோம் நாங்கள்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>