தமிழ்நாடு சேரர், சோழர், பாண்டியர் என்னும் மூவேந்தர்களால் ஆளப்பட்டு வந்தது. சேர அரசர்கள் தமிழ் நாட்டின் மேற்குப் பகுதியை ஆண்டு வந்தனர். சோழர் கிழக்குப் பகுதியையும், பாண்டியர் தெற்குப் பகுதியையும் ஆண்டு வந்தனர். இவற்றை முறையே குணபுலம், தென்புலம், குடபுலம் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
கடல் சார்ந்த நிலம் சேர்ப்பு என்னும் சொல்லால் தொன்று தொட்டு வழங்கப்பட்டு வந்தது. நீர்சூழ்ந்த கடலும் நிலமும் சேருமிடத்தைத் தமிழர் சேர்ப்பு என்றனர். சேரநாட்டின் பெரும்பகுதி சேர்ப்புநிலம். சோழநாட்டிலும், பாண்டியநாட்டிலும் சேர்ப்புப்பகுதி இருந்தாலும் இவற்றில் உள்நாட்டுப்பகுதி அதிகம்.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.
சேரநாட்டை ஆண்ட மன்னர்கள் அனைவரும் ‘சேரமான்’ என்னும் அடை மொழியில் தொடங்கும் பெயருடன் குறிப்பிடப்படுகின்றனர். எளிய ஒப்புநோக்குத் தெளிவுக்காக ‘சேரமான்’ என்னும் சொல் சேர்க்கப்படாமல் பெயர்கள் இங்குக் குறிப்பிடப்படுகின்றன. ஒப்புநோக்க உதவும் வகையில் குடிப் பெயர்களின் பெயர் வரிசையில் அரசர் பெயர்கள் அகரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன. அரசர் பெயரை அடுத்து அவர்கள் பாடப்பட்டுள்ள புறநானூற்றுப் பாடல்-வரிசை எண்ணும் தரப்பட்டுள்ளது. இந்தத் தொகுப்பில் உள்ள சேர அரசர்கள் புறநானூற்றுப் பாடல்களில் வருபவர்கள். பதிற்றுப்பத்து நூலில் குறிப்பிடப்படும் சேர அரச பரம்பரையில் கால நிரல் தெரிகிறது. எனவே அவர்கள் கால நிரல் வரிசையிலேயே காட்டப்படுகின்றனர்.
பண்டைத் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய மூன்று நாடுகளுள் ஒன்றாகத் தமிழகத்தின் மேற்குக் கரையில் அமைந்திருந்த சேர நாட்டை ஆண்ட அரச வழியினரிச் சேர்ந்தவர்களே சேரர்கள் எனப்படுகிறார்கள். சேரர்களின் கொடி விற்கொடி ஆகும். சேரர்கள் வில்லால் அம்பு எய்வதில் சிறந்தவர்களாக இருந்தனர் என்று உய்த்துணரலாம். மூவேந்தர்களில் ஒருவரான இவர்கள் கரூரையும், வஞ்சியையும் தலை நகராகக் கொண்டிருந்தனர். சில சேர அரசர்கள் தொண்டியையும் தலைநகராகக் கொண்டு ஆண்டனர். முற்காலச் சேரர்களைப் பற்றி மிகவும் அரிதாகவே செய்திகள் உள்ளன, ஆனால் சங்க காலச் சேரர்களைப் பற்றி சிறிதளவு செய்திகள் உள்ளன. சேர அரசர்களைப் பற்றிச் சங்ககால இலக்கியங்கள் பாடுகின்றன. குறிப்பாக பதிற்றுப்பத்துப் பாடல்கள் பல செய்திகளைத் தருகின்றன.
“முத்தமிழரசரிடமும் யானைப்படை மிகுதியாயிருந்தது. சோழ வேந்தனிடம் அறுபதினாயிரம் யானைகள் இருந்ததாக ஒரு சீன வழிப் போக்கன் கூறியிருப்பதால், யானை இயல்பாகக் கூட்டங்கூட்டமாய் வாழும் குடமலைத் தொடரையுடைய சேரனிடத்தும் பாண்டியனிடத்தும், அவை எத்துணைப் பெருந்தொகையினவாய் இருந்திருத்தல் வேண்டும் என்பதை ஊகித்துணர்ந்து கொள்ளலாம்.” – பாவாணர்
சங்க காலச்சேரர்தம் எல்லைகள் கொங்கத்தின் எல்லைகளேயாகும். ஆனால் பிற்காலத்தில் உருவாகிய கொல்லம் கேரள வர்மாக்கள் சமஸ்கிருதத்திற்குக் கேரளாவில் முக்கியத்துவம் அளித்ததால், அங்கு தமிழ் அழிந்தது. ஆகையால் அப்பகுதிகள் தனியாட்சி பெற்றன. சங்க, பக்தி காலச் சேரர்கள் (சேரமான் பெருமாள், குலசேகரர் ஆகியோர்) கரூரினின்றே ஆட்சி புரிந்தனர். ஆனால் இவர்கள் ஆட்சி முடிந்தவுடன், கேரள வர்மாக்கள் கிளர்ச்சி மூலம் கொல்லத்தைத் தலைமையிடமாகக் கொண்டு கேரளத்தில் தனியாட்சி நிறுவினர்.
நகரங்கள் :
கரூர் அல்லது வஞ்சி என்று அழைக்கப்பட்ட நகரம் சேர நாட்டின் தலை நகரமாக விளங்கியது. முசிறி சேர நாட்டின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றாகும். இத் துறைமுகத்தின் நடவடிக்கைகள் பற்றியும், அதன் வளங்கள் பற்றியும் பண்டைத் தமிழ் நூல்களிலே குறிப்புக்கள் உள்ளன. சேர நாட்டின் இன்னொரு புகழ் பெற்ற துறைமுகம் தொண்டியாகும். தென்மேற்கு இந்தியாவில் உள்ள மலபார் கரைசார்ந்த நிலப்பகுதிகளையே சேரர் ஆண்டனர் (தற்போது கேரளாவில் உள்ளது).
மன்னர்கள் :
சேர நாட்டை ஆண்ட அரச வம்சத்தினர் சேரர்கள் எனப்பட்டனர். சங்க நூல்கள் பலவற்றில் சேர மன்னர்கள் பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. மிகப் பழைய சங்க நூல்களில் ஒன்றாகிய பதிற்றுப்பத்து பத்து சேர மன்னர்களைப் பாடிய பாடற் தொகுப்பு ஆகும். இதில் ஒவ்வொரு சேர மன்னன் பற்றியும் பத்துப் பாடல்கள் உள்ளன.
ஆட்சியாண்டுகள் – சில அரசர்களின் ஆட்சியாண்டுகள் ஒருவாறு கணிக்கப்பெற்றுளன :
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் 58 ஆண்டுகள்
பல்யானைச் செல்கெழுகுட்டுவன் 25 ஆண்டுகள்
களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் 25 ஆண்டுகள்
செங்குட்டுவன் 55 ஆண்டுகள்
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் 38 ஆண்டுகள்
செல்வக்கடுங்கோ வாழியாதன் 25 ஆண்டுகள்
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை 17 ஆண்டுகள்
இளஞ்சேரல் இரும்பொறை 16 ஆண்டுகள்
சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் (கிமு 1200)
உதியஞ்சேரலாதன் – கி.பி. 45-70
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் – கி.பி. 71-129
பல்யானைச் செல்கெழுகுட்டுவன் – கி.பி. 80-105
களங்காய்க்கண்ணி
நார்முடிச்சேரல் – கி.பி. 106-130
சேரன் செங்குட்டுவன் – கி.பி. 129-184
அந்துவஞ்சேரல் இரும்பொறை
செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை – கி.பி. 123-148
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை – கி.பி. 148-165
இளஞ்சேரல் இரும்பொறை – கி.பி. 165-180
குட்டுவன் கோதை – கி.பி. 184-194
சேரமான் வஞ்சன்
மருதம் பாடிய இளங்கடுங்கோ
சேரமான் கணைக்கால் இரும்பொறை
சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை
பதிற்றுப்பத்து காட்டும் சேரர் :
பத்து
பெயர் இறுதி
குடிப்பெயர்
பெயர்
உறவு
1
ஆதன்
சேரல்
(உதியஞ்சேரல், சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்) எனக் கருதப்படுகிறது
–
2
ஆதன்
சேரல், குடக்கோ
குடக்கோ நெடுஞ்சேரலாதன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
தலைவன் 1-ன் மகன்
3
–
குட்டுவன்
பல்யானைச் செல்கெழு குட்டுவன்
தலைவன் 2-ன் தம்பி
4
–
சேரல்
களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்
தலைவன் 2-ன் தம்பி
5
–
குட்டுவன்
கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன், சேரன் செங்குட்டுவன்
தலைவன் 2-ன் தம்ப
6
ஆதன்
சேரல்
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
தலைவன் 2-ன் தம்ப
7
ஆதன்
கடுங்கோ
செல்வக்கடுங்கோ வாழியாதன்
அந்துவன் மகன்
8
பொறமை
சேரல், குடக்கோ
பெருஞ்சேரல் இரும்பொறை, குட்டுவன் இரும்பொறை
தலைவன் 7-ன் மகன்
9
பொறமை
சேரல்
இளஞ்சேரல் இரும்பொறை
தலைவன் 8-ன் மகன்
புறநானூறு காட்டும் சேரர் :
ஆதன் – கடுங்கோ – செல்வக்கடுங்கோ வாழியாதன் – 14
ஆதன் – கடுங்கோ வாழியாதன் – 8
ஆதன் – குடக்கோ நெடுஞ்சேரலாதன் – 368
ஆதன் – சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதன் – 387
ஆதன் – சேரலாதன் – பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் – 2
கடுங்கோ – பாலைபாடிய பெருங்கடுங்கோ – 11
குட்டுவன் – கடலோட்டிய வேல்கெழு குட்டுவன் – 369
கோதை – குட்டுவன் கோதை – 54
கோதை – கோக்கோதை மார்பன் – 48, 49,
கோதை – கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை – 245
சேரமான் – பாமுள்ளூர் அரசன் – 203
பொறை – அந்துவஞ்சேரல் இரும்பொறை – 13
பொறை – இரும்பொறை – கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை – 5
பொறை – இரும்பொறை – சேரல் – குடக்கோச்சேரல் இரும்பொறை – 210, 211
பொறை – சேரல் – யானைக்கட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை – 20, 22, 229,
பொறை – தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை – 50
பொறை – மாந்தரஞ்ஞேரல் இரும்பொறை – 53
வஞ்சன் – 398
சேரன்-புலவர் :
சேரமான் கணைக்கால் இரும்பொறை – 74
சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ – 282
சேர்த்தாளிகள் :
மாரிவெண்கோ + கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி + இராச்சூயம் வேட்ட பெருநற்கிள்ளி (ஒருங்கிருந்தாரை ஔவையார் – 367)
அந்துவஞ்சேரல் இரும்பொறை + முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி (கருவூரில் மதயானை) -13
பகையாளிகள் :
குடக்கோ நெடுச்சேரலாதன் + வேல்பஃறடக்கைப் பெருநற்கிள்ளி (போர்ப்புறம் போரில் வீழ்ந்த குடக்கோ ஆரங்கழுத்துடன் கிடந்தது) -368, 62, 63,
சேரமான் பெருஞ்சேரலாதன் சோழன் கரிகாற் பெருவளத்தானோடு பொருது புறப்புண் நாணி வடக்கிருந்தான் – 65
சேரமான் கணைக்கால் இரும்பொறை சோழன் செங்கணானோடு திருப்போர்ப்புறத்துப் பொருது பற்றுக்கோட்பட்டுக் குடவாயிற் கோட்டத்துச் சிறையில் கிடந்து, தண்ணீர் தா என்று பெறாது, பெயர்த்துப் பெற்று, கைக்கொண்டிருந்து உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு – 74
மாந்தரஞ்சேரல் இரும்பொறை சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியோடு பொருது தோற்றபோது தேர்வன்மலையன் தன் பக்கம் இருந்திருந்தால் வென்றிருக்காம் எனல் – 125
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் சிறையிலிருந்து யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இருப்பொறை தன்னை விடுவித்துக்கொண்டு வலிதிற்போய் அரியணை ஏறினான்.
மற்ற குறிப்புகள் :
மாக்கோதை மற்றும் குட்டுவன் கோதை ஆகிய சேர மன்னர்களின் காசுகள் தமிழகத்தில் கிடைத்துளன. இதன் மூலம் சங்ககாலப் பாடல்களில் இவர்கலை பற்றியுள்ள செய்திகள் உறுதியாகின்றன.
சேர மன்னர்களின் பட்டியல் :
முற்காலச் சேரர்கள்
சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் கி.மு 1200 (?)
கடைச்சங்க காலச் சேரர்கள் :
கருவூர் ஏறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை (காலம் தெரியவில்லை)
உதியஞ்சேரலாதன் கி.பி. 45-70
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் கி.பி. 71-129
பல்யானைச் செல்கெழுகுட்டுவன் கி.பி. 80-105
களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் கி.பி. 106-130
செங்குட்டுவன் கி.பி. 129-184
அந்துவஞ்சேரல் இரும்பொறை (காலம் தெரியவில்லை)
செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை கி.பி. 123-148
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் கி.பி. 130-167
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை கி.பி. 148-165
இளஞ்சேரல் இரும்பொறை கி.பி. 165-180
குட்டுவன் கோதை கி.பி. 184-194
மாரிவெண்கோ காலம் தெரியவில்லை
சேரமான் வஞ்சன் காலம் தெரியவில்லை
மருதம் பாடிய இளங்கடுங்கோ காலம் தெரியவில்லை
சேரமான் கணைக்கால் இரும்பொறை காலம் தெரியவில்லை
சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை காலம் தெரியவில்லை
பிற்காலச் சேரர்கள் :
சேரமான் பெருமாள் கி.பி. 8ஆம் நூற்றாண்டு.