திருவையாற்றுக்கு அருகில் வீரசிங்கம் பேட்டையில் 5 அடி உயர பிரம்மா சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த சிலையில் நான்கு முகங்கள் இருந்த காரணத்தால் அது நான்முகனான பிரம்மா சிலை என அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?
சிலை கிடைத்த செய்தியை கிராம நிர்வாக அதிகாரிக்கு தெரியப்படுத்தவே, அவர் அச்செய்தியை உடனடியாக திருவையாறு தாசில்தாருக்கு தெரியப்படுத்தினார். அவரது உத்தரவின் பேரில் நடுகாவேரி காவல் நிலையத்தில் இருந்து காவலர்கள் சிலரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் தற்போது சிலை கிடைத்த இடத்துக்கு விரைந்து விவரங்களைச் சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்கள் சிலையின் வயதையும் அது உருவான காலகட்டத்தையும் அறிய தொல்லியல் துறையின் உதவியை நாடியுள்ளனர்.