8ம் நூற்றாண்டை சேர்ந்த சமணர் தீர்த்தங்கரர் சிற்பம் தா.பேட்டை அருகே கண்டுபிடிப்பு!

8ம் நூற்றாண்டை சேர்ந்த சமணர் தீர்த்தங்கரர் சிற்பம் தா.பேட்டை அருகே கண்டுபிடிப்பு!

8ம் நூற்றாண்டை சேர்ந்த சமணர் தீர்த்தங்கரர் சிற்பம் தா.பேட்டை அருகே கண்டுபிடிப்பு!

தா.பேட்டை அருகே மிகப் பழமையான அறிய சமணர் தீர்த்தங்கரர் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்வெட்டு மற்றும் தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர் பாபு என்பவர் கூறியதாவது: தா.பேட்டையிலிருந்து வடமலைக்கு செல்லும் சாலை ஓரத்தில் செல்லாண்டியம்மன் கோயில் அருகே அறிய சமண தீர்த்தங்கரர் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை ஆராய்ந்தபோது பொதுவாக சமண முனிவர்களது சிலை அமைப்போடு முக்குடையின் கீழ் தீர்த்தங்கரர் அமர்ந்த நிலையிலும் சிலையின் மேற்புறம் இரு புறங்களில் வானவர்கள் உள்ள நிலையிலும் சிற்பம் காணப்படுகிறது. சமணர் என்ற பெயரை பொருள் விளக்கத்தோடு திவாகரர் நிகண்டு (கி.பி. 8ம் நூற்றாண்டில் இயக்கப்பட்ட நூல்) விளக்குகிறது. அருகர், ஆசீவகர், சாவகர் போன்ற சொற்கள் சமணர் என்ற பெயரை குறிக்கும். சமணர்கள் எளிய வாழ்க்கை வாழ்பவர்கள்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

துறவு நிலையை பின்பற்றுபவர்கள். நம் தமிழகத்தில் சமண சமயம் கி.பி.3ம் நூற்றாண்டிலேயே பரவியிருந்ததை பிராமிக் கல்வெட்டு சான்றுகள் குறிப்பிடுகின்றன. மேலும் கி.பி.8ம் நூற்றாண்டு வரை சமணம் செல்வாக்கு பெற்றிருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தற்போது இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள சமணர் சிற்பம் முற்காலத்தில் இப்பகுதியில் சமண சமயம் பரவியிருந்ததை வெளிப்படுத்துவதாக உள்ளது. தா.பேட்டையைச் சுற்றியுள்ள மலைசார்ந்த பகுதிகளில் குகைத்தலங்கள் இருக்க வாய்ப்புள்ளது.

சில கிராம கோயில்களிலும் வெவ்வேறு பெயர்களோடு சமணர் சிற்பங்கள் இருப்பது கண்கூடு. தா.பேட்டை அருகே கண்டறியப்பட்ட இந்த தீர்த்தங்கரர் சிற்பம் கி.பி.8ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம். தீர்த்தங்கரர் சிலைக்கு சற்று தொலைவில் உள்ள செல்லாண்டியம்மன் கோயிலின் வெளிப்புறத்தில் சைவ, சமய குறவர்களில் ஒருவரான மாணிக்கவாசகர் சிற்பம் ஒன்றும் காணப்படுகிறது. இவற்றை ஆராயும்போது இப்பகுதியில் கி.பி.8ம் நூற்றாண்டு வரை சமண சமயம் பரவி இருந்து பின்னர் சைவம் இப்பகுதியில் பரவத்தொடங்கியிருக்ககூடும் என கருதலாம். தற்போது இந்த தீர்த்தங்கரர் சிற்பம் போதிய பாதுகாப்பின்றி காணப்படுகிறது. வரலாற்றின் பொக்கிஷங்களாக திகழும் இத்தகைய தொன்மை சின்னங்களை பாதுகாப்பது தமிழக அரசின் கடமையாகும் என்று கூறியுள்ளார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>