மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகளை படியெடுக்கும் பணிகள் தொடக்கம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகளை படியெடுக்கும் பணிகள் தொடக்கம்!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கல்வெட்டுகளை படியெடுக்கும் பணிகளை, தமிழக தொல்லியல் துறையினர் பணிகளை தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து சாந்தலிங்கம் கூறியதாவது: மீனாட்சியம்மன் கோயிலில் சுமார் 800 ஆண்டுகள் பழமையான தமிழ் கல்வெட்டுகள் 70-க்கும் மேல் உள்ளன. இவற்றை மத்திய அரசின் தொல்லியல்துறை 1935-36, 1941-42-ம் ஆண்டுகளில் படியெடுத்து, அந்தப் படிகளை மைசூரில் உள்ள அலுவலகத்தில் வைத்திருக்கின்றனர். அதில் ஒரு சில கல்வெட்டுகளை மட் டும் படித்து, தென்னிந்திய கல்வெட்டு தொகுதிகளில் முழுமையான பாடங்களாக வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் 70 கல்வெட்டுகளின் முழுமையான பாடங்கள் இதுவரை வெளி யிடப்படவில்லை. அவற்றைப் பற்றிய ஆங்கிலக் குறிப்புகள் மட்டும் ஆண்டு அறிக்கைகளிலே வந்திருக்கின்றன. இதுவரை எழுதப்பட்ட கோயில் வரலாறுகள் எல்லாம், அந்த சிறு குறிப்புகளிலிருந்து மட்டுமே எழுதப்பட்டுள்ளன.

தற்போது அத்தனை கல்வெட்டுகளையும் முழுமையாகப் படித்து வரி, வரியாக எழுதிப் பதிப்பித்து பொதுமக்களுக்கும், ஆராய்ச்சி மாணவர்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்பது எங்களுடைய முயற்சியாகும். அதன் மூலமாக கோயில்களில் 800 ஆண்டுகளில் என்னென்ன விதமான பணிகள் நடந்துள்ளன, எப்படிப்பட்ட கொடைகள் என்ன காரணங்களுக்காக கொடுக்கப் பட்டுள்ளன. எந்தெந்த மன்னர்கள் இந்த கோயிலின் வளர்ச்சிக்காக உழைத்திருக்கிறார்கள்.

அவர்களுக்கு உதவியாக இருந்த குறுநில மன்னர்கள், வட்டார செல்வந்தர்கள் யார் யார் என்பன போன்ற வரலாற்றைத் துல்லியமாக கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையரின் அனுமதியைப் பெற்று இப்பணிகளைத் தொடங்கி உள்ளோம். கல்வெட்டுகளை படித்து முடித்த பிறகு ஆராய்ச்சியின் முழுமையான விவரங்களை அதிகபட்சமாக 3 மாதங்கள் பணியாற்றி எழுத்துப் பொறிப்புகளை படியெடுத்து படிக்கப் போகிறோம். படித்து முடித்தபிறகு ஆராய்ச்சியின் முன்னுரை, ஆங்கிலத்தில் குறிப்புரை எல்லாவற்றையும் சேர்த்து தயார் செய்து அச்சாக்கம் செய்து 6 மாதத்தில் புத்தகமாக கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தப் பணியை தொடங்கியுள்ளோம். இதில், 13-ம் நூற்றாண்டுக்குப் பிறகு பிற்கால பாண்டியர்களின் கொடை பற்றிய ஆவணம்தான் அதிகம். அத்தகைய கல்வெட்டுகள் தெளிவான தமிழ் எழுத்துகளால் எழுதப்பட்டவை என்று கூறினார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>