காவேரிப்பட்டணம் அருகே பழங்கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!

காவேரிப்பட்டணம் அருகே பழங்கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!

காவேரிப்பட்டணம் அருகே பழங்கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே 500 ஆண்டுக்கு முந்தைய கல்வெட்டில் ஊர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். இந்த மாவட்டத்தில் ஏராளமான நடுகற்கள் உள்ளது. இவற்றில் கல்வெட்டுகளுடன் இருக்கும் நடுகற்கள், அப்பகுதியின் பெயர் மற்றும் யார், யாருக்கு போர் மூண்டது போன்ற முக்கிய தகவல்களை கொண்டதாக உள்ளது. இதன்மூலம் அக்காலத்து வரலாற்றினை அறிந்துகொள்ள முடிகிறது. இந்த வரலாற்றினை வெளி உலகத்திற்கு கொண்டு வரும் முயற்சியை கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு எடுத்துள்ளது.

அதன் அடிப்படையில் கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியாக காப்பாட்சியர் கோவிந்தராசு மற்றும் தொல்லியல் ஆய்வாளர் சுகவனமுருகன், ஆய்வுக்குழு தலைவர் நாராயணமூர்த்தி, செயலாளர் டேவீஸ் ஆகியோரது ஏற்பாட்டின்பேரில், காவேரிப்பட்டணம் அடுத்த பனகமுட்லு கிராமத்தில் உள்ள சுரேஷ் என்பவரது மாந்தோப்பில் சுமார் 500 ஆண்டு பழமையான கல்வெட்டுடன் கூடிய நடுகல் இருப்பதை அறிந்து அதை படியெடுத்தனர். அந்த நடுகல்லில் வீரன் ஒருவன் வில்லேந்தி போரிடுவது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. மேற்புறம் 9 வரிகளில் கல்வெட்டு உள்ளது. இதன் மூலம் தற்போது பனகமுட்லு என்று அழைக்கப்படும் இந்த ஊர் கடந்த 500 ஆண்டுக்கு முன்னர் வண்ணக்கமுட்டல் என்று அழைக்கப்பட்ட செய்தி தெரிய வந்துள்ளது.

அப்போது இந்த ஊரின் மீது படையெடுத்து வந்த தாமயதண்ணாக்கன் என்பவனது படையை அழித்து, தானும் இறந்து போனான் காமிண்டர் கோவிந்தாண்டை ஆந்தையந்த அடியான் பணிக்கமாராயன் மகன் படலன் என்ற வீரன். அவனது உயிர்த் தியாகத்தினை போற்றும் வகையில், அவனது உருவத்தை கல்லில் வடிக்கச் செய்தார் கோவிந்தாண்டை காணிகாத்தான் இக்கல்லை நட்டு வைத்தார் என்ற செய்திகளை தெரிவிக்கிறது. இந்த கல்வெட்டு, அருகே இரண்டு நடுகற்கள் உடைந்த நிலையில் காணப்படுகிறது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>