பர்கூர் அருகே 3 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த அரிய ஈமச்சடங்கு ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த நாமல்குண்டு என்னுமிடத்தில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் வெங்கடேஸ்வரன், முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் பாலாஜி, மஞ்சுநாத், கார்த்திக், செல்வமணி, செல்லையா மற்றும் தகடூர் பார்த்திபன் ஆகியோரது கள ஆய்வின் போது இந்த ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேராசிரியர் வெங்கடேஸ்வரன் கூறியதாவது: இந்த ஓவியங்கள் மூதாதையர்கள் வழிபாட்டிற்காக எழுப்பப்படும் ஈமச்சின்னத்தை சித்திரிக்கும் ஓவியமாகும்.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?
இதில் சதுர வடிவ ஓவியம் ஒன்று சவ அடக்க நிகழ்ச்சியை விளக்குகிறது. இந்த ஓவியத்தில் பெண்ணின் உருவங்கள் என தெரிகிறது. மேலும், அந்த காலத்தில் பெண்கள் தலைமையில் சடங்குகள் நடந்ததற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன. மேலும் பறவை, விலங்குகள் வடிவங்களும் வரையப்பட்டுள்ளது.
இந்த ஓவியங்களில் மனிதன் தன் இரு கைகளையும் மேலே தூக்கி நடந்து செல்வது போன்றும், ஆயுதங்களுடன் நிற்பது போலவும், படையல் கலன் உள்ளிட்டவையும் சித்தரிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு மத்தியப்பிரதேசம், கர்நாடக மாநிலங்களில் கிடைத்த ஓவியங்களை விட தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிடைத்த ஓவியங்கள் ஈமச்சடங்கு நிகழ்வை தெளிவாகவும், விரிவாகவும் காட்சிப்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.