ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தாளவாடி வட்டாரத்தில் உள்ள மரூர் கிராமத்தில் உள்ள பால் குளிரக வளாகத்தில் 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுக்கல் கண்டறியப்பட்டு, தொல்பொருள் ஆர்வலர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
இதையடுத்து, ஈரோடு சக்தி பிரகாஷ், ஓமலூர் சீனிவாசன் ஆகியோர் மரூர் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இரண்டு நிலையாக அமைந்துள்ள நடுகல்லில் 3 வீரர்கள் போர் புரிவது போலவும், இரண்டாம் நிலைக் கற்களில் இறந்த வீரர்களை தேவகன்னிகள் அழைத்துச் செல்வது போலவும் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
இங்குள்ள தொல்லியல் மேடுகளை அகழாய்வு செய்தால் பல தொன்மையான தகவல்கள் கிடைக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.