15ம் நுாற்றாண்டு நவகண்ட வீரன் சிலை கண்டெடுப்பு!

15ம் நுாற்றாண்டு நவகண்ட வீரன் சிலை கண்டெடுப்பு!

15ம் நுாற்றாண்டு நவகண்ட வீரன் சிலை கண்டெடுப்பு!

தன் தலையை தானே அறுத்து, காணிக்கைக் கொடுக்கும் வீரனின் நவகண்ட சிலை, திருவானைக்கோவிலில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இச்சிலை, 15ம் நுாற்றாண்டைச் சேர்ந்தது என, வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், திருவானைக்கோவிலில், கிராம நிர்வாக அலுவலகம் எதிரே, தன் கழுத்தில், தானே கத்தி வைத்து அறுக்கும் ஆண் உருவ சிலை, பல ஆண்டுகளாக உள்ளது.

இதுகுறித்து தகவல்அறிந்த, உத்திரமேரூர் பகுதி வரலாற்று ஆய்வு மையத் தலைவர் பாலாஜி மற்றும் அதன் உறுப்பினர்கள் கோகுல கிருஷ்ணன், சுரேஷ்குமார் உள்ளிட்டோர், அப்பகுதிக்கு சென்று சிலையை ஆய்வு செய்தனர். இந்த சிலை, 15ம் நுாற்றாண்டைச் சேர்ந்த சிலை என, தெரிவித்தனர்.

இதுகுறித்து, உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் பாலாஜி கூறியதாவது: பழங்காலத்தில், அரசர்கள், எதிரிகளோடு போர் தொடுக்க, படையெடுத்து செல்லும் போது, தனக்கு வெற்றி கிடைக்க, படை வீரர்களில் ஒருவன், தன் தலையை தானே அறுத்து பலி கொடுக்கும் வழக்கம் இருந்துள்ளது. இந்த உயிர் துறத்தலை, ‘அவிபலி’ என, தொல்காப்பியம் கூறுகிறது. இச்செய்திகள் சங்க இலக்கியங்களிலும், மணிமேகலை, கலிங்கத்துப்பரணி, சிலப்பதிகாரம் போன்ற நுால்களிலும் காணப்படுகின்றன. அதில், பலி கொடுக்கப் பட்ட வீரன், எந்த அரசருக் காக இச்சம்பவம் நிகழ்ந்தது, போர் விபரங்கள் உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றிருக்கும்.இதற்கு முன், திருப்புலிவனத்தில் இது போன்ற ஒரு சிலை கண்டெடுத்தோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: