திருப்பூர் அருகே 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பெண்களுக்கான வீரக்கல் கண்டுபிடிப்பு!

திருப்பூர் அருகே 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பெண்களுக்கான வீரக்கல் கண்டுபிடிப்பு!

திருப்பூர் அருகே 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பெண்களுக்கான வீரக்கல் கண்டுபிடிப்பு!

திருப்பூர் அருகே, பெண்களுக்கென எடுக்கப்பட்ட, 14ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, ‘வீரக்கல்’ கண்டறியப்பட்டுள்ளது.

திருப்பூர், வீரராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தின் இயக்குனர் ரவிக்குமார் மேற்கொண்ட கள ஆய்வில், இது கண்டறியப்பட்டுள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?


ரவிக்குமார் கூறியதாவது: பழங்காலத்தில் வீரனுக்கு மட்டுமன்றி, வீரபத்தினிக்கும் நடுகல் எடுக்கப்பட்டதை, இலக்கியங்கள் மூலம் அறியலாம். கணவர் இறந்த பின், வீர மகளிர் உயிர் வாழ்வதில்லை என்பது அக்கால வழக்கமாக இருந்துள்ளது.

அவ்வாறு உயிர் நீத்தவர் நினைவாக எடுக்கப்பட்ட நடு கற்களுக்கு, சதிக்கல், மகா சதிக்கல், தீப்பாய்ந்த அம்மன் என, பல பெயர்கள் காணப்படுகின்றன.

கண்டுபிடிக்கப்பட்ட வீரக்கல், 35 செ.மீ., அகலமும், 75 செ.மீ., உயரமும் கொண்டது. மேற்பகுதியில், சங்கு, நாமம், சக்கர குறியீடுகள், கீழ்ப்பகுதியில் மதுக் குடுவை உள்ளது.

வீரனின் அருகிலுள்ள பெண், தனது வலது கையை துாக்கிய நிலையில், செதுக்கப்பட்டுள்ளது. எழுத்து பொறிப்பு இல்லை; நடுகல்லின் காலம், 14ம் நுாற்றாண்டைச் சேர்ந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: