ஊரை காத்து, புலியால் உயிர் விட்ட வீரனின் நடுகல்லை, மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த, ஜவ்வாதுமலை அடிவாரத்தில், நாயக்கனூரில், வேடியப்பன் என அழைக்கப்படும் புலிக்குத்திப்பட்டான் நடுகல்லை ஆய்வு செய்தோம். கி.பி., 14ம் நூற்றாண்டை சேர்ந்த, நான்கடி உயரம், 3.50 அடி அகலம் உள்ள கல்லில், வீரன் ஒருவன் புலியோடு சண்டையிடும் காட்சி உள்ளது. அதில், புலியைக் கொன்று, வீரனும் இறந்தான். இதனால் வீரனுக்கு, நடுகல் வைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இப்பகுதியில், புலியூர், புலிமேடு, புலிக்குகை, புலிக்குட்டை என்ற ஊர்கள் இருப்பதால், ஏராளமான புலிகள் இருந்துள்ளன என்பது தெரியவந்துள்ளது. ஊரை காத்து, புலியால் உயிர் விட்ட வீரனை, இன்றளவும் மக்கள் வழிபட்டு வருகின்றனர்.