1200 ஆண்டு பழமையான கல்வெட்டு திருச்சி அருகே கண்டுபிடிப்பு!

1200 ஆண்டு பழமையான கல்வெட்டு திருச்சி அருகே கண்டுபிடிப்பு!

1200 ஆண்டு பழமையான கல்வெட்டு திருச்சி அருகே கண்டுபிடிப்பு!

தொட்டியம் களத்தூர் கிராமத்தில் 1,200 ஆண்டுகள் பழமையான கோயிலில் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக கல்வெட்டு ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் துறை ஆய்வாளர் பாபு, களத்தூர் கிராமத்தில் உள்ள சிவாலயத்தை ஆய்வு செய்தார். தொடர்ந்து அங்குள்ள கல்வெட்டுக்களை கண்டறிந்தார். பின்னர் இந்த ஆய்வு குறித்து பாபு கூறியதாவது, தொட்டியம் அடுத்துள்ள களத்தூர் கிராமத்தில் ஈசனத்சுவரர் சிவாலயம் அமைந்துள்ளது.

இங்கு மூலவராக ஈசனத்சுவரர் உடனமர் ராஜராஜேஸ்வரி அருள்பாலிக்கின்றனர். மிகவும் சேதமடைந்துள்ள இந்த சிவாலயம் சுமார் 1,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயிலாக இருக்கலாம். பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டு நாயக்கர் காலத்தில் புனரமைக்கப்பட்டு இருக்கலாம். இங்குள்ள ஜேஷ்டாதேவியின் சிலை 9ம் நூற்றாண்டுக்கு முற்பட்டது. 3 ஜேஷ்டாதேவி சிலைகள் உள்ளன.

இவ்வாலயத்தில் உள்ள வெளிப்பிரகார கல்வெட்டில் கமலரத மண்டபமும், மகா மண்டபமும், நெற்களஞ்சியமும் இருந்ததாக கூறுகிறது. ஆமைசிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இச்சிற்பம் இருந்தால் நீர்நிலை மற்றும் விவசாயம் செழித்த பகுதியாக கருதப்படும். மேலும் இக்கோயிலில் கோயில் சொத்தினை திருடினால் சந்திரன், சூரியன் உள்ளவரை பாவம் அகலாது என்பதை உணர்த்தும் வகையில் சந்திர சூரியர் சிலை கோயில் மேல்கூரையில் உள்ளது என்றார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: