பாழடைந்து வரும் 1,100 ஆண்டு வரலாறு சமணர் கோவில் அழியும் அவலம்!

திருப்பூர் அருகே, 1,100 ஆண்டுகள் பழமையான சமணர் கோவில், எந்நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. புராதன சின்னமான இக்கோவிலை புதுப்பித்து பாதுகாக்க, அரசு முன்வர வேண்டும்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி_புளியம்பட்டி சாலையில் உள்ள ஆலத்துாரில், 1,100 ஆண்டுகள் பழமையான, அமணீஸ்வரர் கோவில் உள்ளது. பண்டைய கொங்கு நாட்டின் வட பரிசார நாட்டில், அக்கால வணிகர்கள் பயன்படுத்திய பெருவழியில், இக்கோவில் அமைந்துள்ளது. பல நுாற்றாண்டுகளுக்கு முன், மைசூரு பகுதியில் இருந்து வந்த சமண மதத்தினர், இங்கு குடியேறி, ‘வீரசங்காக பெரும்பள்ளி அணியாதழகியார்’ என்ற சமணர் கோவிலை கட்டினர். அழகிய வேலைப்பாடுகள் இப்பெயரே காலப்போக்கில் மருவி, அமணீஸ்வரர் கோவில் என அழைக்கப்படுகிறது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


முழுவதும் கற்களால், அழகிய வேலைப்பாடுகளுடன் பிரம்மாண்டமாக, இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. ஒரு ஏக்கரில், கருவறை முன் மண்டபம் மற்றும் கோவில் தெப்பக்குளம் என, அற்புதமான கலை நயத்துடன், கோவில் விளங்குகிறது. கோவில் துாண்கள், மேற்கூரை ஆகியவற்றில், சிற்ப வேலைப்பாடுகள் மிகுதியாக காணப்படுகின்றன. பெரிய துாண்களில், பல்வேறு சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கருவறை முழுவதும், அழகிய வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது. கருங்கல்லிலேயே வெளிச்சமும், காற்றும் உள்ளே புகும் வகையில், வியத்தகு தொழில் நுட்பத்தில், ஜன்னல் அமைக்கப்பட்டுள்ளது. கி.பி. 10ம் நுாற்றாண்டில், கொங்கு சோழன், ஆலத்துார் கோவிலுக்கு வரி வருவாய் வழங்கினார். இக்கோவில், 12ம் நுாற்றாண்டில், குலோத்துங்க சோழன் காலத்தில், அவிநாசி கோவிலுக்கு, தாரை வார்த்து கொடுக்கப்பட்டது. ஆனால், ஆலத்துார் ஊர் சபை நிர்வாகிகள், ஆறு நாட்டாரின் சபைக்கு, இப்பிரச்னையை கொண்டு சென்றனர். ஆறு நாட்டார் சபை தீர்ப்பில், இரு கோவிலுக்கும் வரி வருவாயை பயன்படுத்த, தீர்ப்பு வழங்கப்பட்டதாக கல்வெட்டு செய்தி கூறுகிறது.

பழங்கால அரசு நிர்வாகம், அரசாணை, நீதிமன்றம், தீர்ப்பு என பல செய்திகளை, இக்கோவில் தாங்கி நிற்கிறது. ஆனால், இதன் மகத்துவத்தை அறியாமல், அரசால் கண்டு கொள்ளப்படாமல் இக்கோவில் வீணடிக்கப்பட்டு வருகிறது. இடிந்து விழும் அபாயம்தொன்மை வாய்ந்த இக்கோவில், இன்று சிதிலம்அடைந்துள்ளது. கருவறை சேதமடைந்து காணப்படுகிறது. முன் மண்டபத்தில், பல இடங்கள் உடைந்துள்ளன. சுற்றிலும் மரங்கள், முட் செடிகள் வளர்ந்துள்ளன. கோவில், எந்நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் இருக்கிறது. குளம், மண்ணால் மூடப்பட்டு, தன் அடையாளத்தை இழந்து நிற்கிறது. இக்கோவிலின் சிறப்பை அறிந்து, மதிப்பு மிகுந்த கோவில் சிலைகளை காப்பாற்றும் வகையில், 20 ஆண்டுகளுக்கு முன், கோவையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில், அவை பாதுகாப்பாக வைக்கப்பட்டன. அமணீஸ்வரர் கோவிலின் பழம் பெருமையை கருதி, புராதன சின்னங்கள் பாதுகாப்பின் கீழ், இக்கோவிலை சீரமைக்க வேண்டும் என்பதே, வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் அவிநாசி வட்டார மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சோழர் கால கோவிலை சீரமைக்க வலியுறுத்தல் :

பாழடைந்து வரும் 1,100 ஆண்டு வரலாறு சமணர் கோவில் அழியும் அவலம்!

பாழடைந்து வரும் 1,100 ஆண்டு வரலாறு சமணர் கோவில் அழியும் அவலம்!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே மேல்சூடாபுரம் பகுதியில், 13ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, சோழர் காலத்தில் கட்டப்பட்ட ஏகாம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. கோவில் கருவறை, அதை ஒட்டிய அர்த்த மண்டபம் மற்றும் மகா மண்டபம், வரலாற்றை தாங்கி நிற்கின்றன. கருவறையில் இருந்து, கோபுரத்தின் உச்சி வரை, கருங்கல் மூலம் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. சோழர் கால வரலாற்றின் முக்கிய நினைவு சின்னமாக உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவில், தற்போது அழியும் நிலையில் உள்ளது.

இது குறித்து, வரலாற்று தேடல் குழுவைச் சேர்ந்தர் கூறியதாவது :

ஏகாம்பரேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள மதில் சுவர், பாதிக்கும் மேல் இடிந்த நிலையில் உள்ளது. கோவில் முழுவதும், மரம், செடி படர்ந்து, புதர் மண்டி காணப்படுகிறது. கோவிலில் மொத்தம், நான்கு கல்வெட்டுகள் உள்ளன. இவற்றில், இரு கல்வெட்டுகளை தொல்லியல் துறை பதிவு செய்துள்ளது. இரு கல்வெட்டுகளில், சோழ மண்டலங்களை பற்றிய குறிப்பு உள்ளது. மற்றொரு கல்வெட்டில், ஹொய்சாளர்களின் கடைசி அரசனான, மூன்றாம் வல்லாளன் கொடுத்த தானங்கள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளன. கி.பி., 1301ல், மன்னன், மூன்றாம் வல்லாளன் அரசாணை ஒன்றை வெளியிடுகிறான். அதில், அளேகுந்தாணி ராஜ்யத்தில் உள்ள நாடுகளில் இருந்து கிடைக்கும் வரித்தொகையை, அந்தந்த நாட்டில் உள்ள கோவில் வழிபாட்டிற்கும், அமுது படைக்கவும் செலவிடுமாறு, கோவில் மடாதிபதிகளுக்கு ஆணை பிறக்கப்பட்டுள்ள செய்தியை, கல்வெட்டு விளக்குகிறது. வரலாற்றை தாங்கி நிற்கும் சோழர் கால ஏகாம்பரேஸ்வரர் கோவிலை, மாவட்ட நிர்வாகமும், தொல்லியல் துறையும் சீரமைக்க வேண்டும்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: