கரூர் மாவட்டம் பரமத்தி அருகே, சுமார் ஆயிரத்து 1000 ஆண்டுகள் பழமையான, கி.பி 10 ம் நூற்றாண்டை சேர்ந்த கிரந்த மந்திரக் கல்வெட்டும், நடுகல், மற்றும் கல் செக்குகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
உலகத் தமிழர் பேரவை-யில் உறுப்பினராக இணைய இங்கு அழுத்தவும்
கரூர் மாவட்டம் பரமத்தியை அடுத்து உள்ளது முன்னூர் கிராமம். இங்குள்ள செல்லாண்டியம்மன் கோவில் எதிரில் உள்ள விவசாய நிலத்தில் நடுகல் மற்றும் அய்யனார் சிலை ஒன்றும், அருகில் உள்ள நிலங்களில் காவல் வீரனின் சிலை, கையில் வில் அம்புடன் வீரன் சிலை, மற்றும் குதிரை வீரன் சிலைகளும் உள்ளன. அத்துடன் 7 கல் செக்குகள், கல்லால் ஆன தண்ணீர் தொட்டியும், மயில், அன்னம், பாம்பு, கொடி வடிவங்களுடன் கூடிய கிரந்த மந்திரக் கல்வெட்டும் உள்ளது.
இவற்றின் தொன்மை பற்றி அப்பகுதி மக்கள் அறிந்திராத நிலையில், திருப்பூர் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வக பொறியாளர்கள் ஆய்வு செய்தனர். இதில் கிரந்த மந்திரக் கல்வெட்டுகள் சுமார் ஆயிரத்து 100 ஆண்டுகள் பழமையானவை என்றும், 10 ம் நூற்றாண்டின் பல்லவர் ராஜசிம்மர் 2 ம் நரசிம்மர் கால கட்டத்தை சார்ந்ததாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
கல் செக்குகளின் அடியில் வணிக கல்வெட்டுகள் காணப்படுவதால், இந்த கிராமம் ஆயிரம் ஆண்டுகள் பழமையான வணிக நகரமாக இருந்திருக்கலாம் என்றும் கூறியுள்ளனர். ஏற்கனவே இப்பகுதி வணிகத்தில், சிறந்து விளங்கியதற்கான ஆதாரமாக கரூர் அமராவதி ஆற்றில் கிடைத்த நாணயங்கள் கரூர் அரசு அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ள நிலையில் தற்போது புதிய ஆதாரங்கள் கிடைத்து இருப்பதாகவும் கூறியுள்ளனர்.