திருவள்ளுவர் சிலையை அவமதிப்பு செய்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் – உலகத் தமிழர் பேரவை வலியுறுத்தல்!

திருவள்ளுவர் சிலையை அவமதிப்பு செய்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் – உலகத் தமிழர் பேரவை வலியுறுத்தல்!

தஞ்சை மாவட்டம் வல்லம் பகுதி பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலையை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் மை மற்றும் சாணியை பூசி அவமதித்துள்ளனர்.

ஐயன் வள்ளுவன் சிலையை அவமதித்தது, தமிழ் மொழி மற்றும் ஒட்டு மொத்த உலகத் தமிழர்களை அவமதித்தது போலாகும். காவல்துறை காலம் தாழ்த்தாமல் குற்றவாளிகளை உடனடியாக அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும். இப்படி செய்யத் துணிந்த சமூக விரோதிகள் எவராயினும், எவ்வித இரக்கமும் காட்டாமல், குண்டர் சட்டத்தில் கைது செய்வது மட்டுமல்லாது, அந்த குற்றவாளிகளுக்காக வழக்குரைஞர்கள் எந்த நீதிமன்றத்திலும் வழக்காட மறதலிக்க வேண்டும் என்று உலகத் தமிழர் பேரவை வலியுறுத்துகிறது. இனி இதுபோல் வேறொரு நிகழ்வு எங்கும் நடைபெறாவண்ணம் கண்காணிக்கப்பட வேண்டும் என்பதை அரசுகள் கவனித்துக் கொள்ள வேண்டும்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: