எனது தகப்பனார் “தென் மொழியார்” என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட திரு. தென் மொழி ஞானபண்டிதனார் (வயது 85) இன்று (12-04 -2018) காலை 9.15 மணிக்கு சிகிச்சை பலனின்றி பெங்களூர் மணிபால் மருத்துவமனையில் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்தோடு தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
சிறு வயது முதலே தமிழ் மொழி, தமிழ் மண் மீதும் தீராத காதல் கொண்டதால், கவிதை வார்க்கும் திறன் 7 வயது முதலே இருந்தது. அப்படி தனது 12-ம் வயதில் அவரால் எழுதப்பட்ட மரபுக் கவிதையால் ஈக்கப்பட்ட தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. ஐயா அவர்களால் திரு.ஞானபண்டிதனார் அவர்களுக்கு “தென் மொழி” என்ற பட்டத்தை வழங்கி சிறப்பித்தார்.
“தென் மொழி” என்பதை தனது பெயருக்கு முன்னால் இடுவதை மிகப் பெருமையாக தனது இறுதிக் காலம் வரை அடையாளத்தோடேயே வாழ்ந்து வந்துள்ளார். “தென் மொழிக் குடில்” என்ற பெயரைச் சொன்னாலே கோவை வட்டாரத்தில் அது ஞானபண்டிதனாரின் வீடு என தெரியுமளவுக்கு சிறப்பு இருந்துள்ளது.
தமிழ் இனம், மொழியின் பெருமைகளை பறைசாற்றி வந்ததால் தமிழகம் முழுக்க மாணக்கர்கள் உருவாக்கி இருக்கிறார்.
தென் மொழி ஞானபண்டிதனார் 12-க்கும் மேற்பட்ட தமிழ் நூல்களை எழுதி பதிப்பித்துள்ளார்.
தமிழ் மரபு கவிதை வடிப்பதில் தமிழகத்தில் குறிப்பிடத்தக்கதொரு இடத்தில் இருந்து வருகிறார். மரபு கவிதை வடிவிலேயே பல நூல்கள், கட்டுரைகள், மேடைகள் என தமிழ் ஆர்வலர்களிடத்தில் புகழ் பெற்றவர்.
இளமை காலத்தில் பெரியாரின் முற்போக்கு சிந்தனையால் ஈர்க்கப்பட்டு அதில் முழு ஈடுபாடோடு தமிழக களத்திலும் பயணப்பட்டு வந்தார். குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி இயக்கம் வளர தனது சொந்த சொத்துக்களை இழந்துள்ளார்.
பெரியார், மணியம்மைக்கு பின்பு பெரியாரது இயக்கம் மாறுதலாகிப் போனதை நினைத்து கொண்டதால், அவருக்கு கிடைத்த மாவட்ட பொறுப்பாளர் பதவியையும் ஏற்க மறுத்தார்.
தான் படித்த காலத்தில் படிப்பதற்கு உதவிய கோவை சுப்ரமணியம் முதலியாரின் நினைவாக எனக்கு சுப்ரமணி என பெயரிட்டு நன்றி மறவாமல் இருந்துள்ளார். அவரது இன்னொரு மகனுக்கும், மகளுக்கும் தூய தமிழ் பெயரிட்டு வாழ்ந்து வந்தார்.
எனது தாயார், அதாவது தென்மொழியாரின் மனைவி ராசாமணி (வயது 75) அவர்கள் அவரது பிரிவை நினைத்து மிகுந்த மன வேதனையோடு இருந்து வருகிறார்.
அக்னி
ஒருங்கிணைப்பாளர்
உலகத் தமிழர் பேரவை
www.worldtamilforum.com
தொடர் கொள்ள செயல் பேசி :
89460-97054/ 79045-76115/ 72008-28850/ 98417-27759
……….
தகன நேரம்.. இன்று மாலை 4
இறுதி தகனம் நடைபெறுமிடம்:
பனத்தூர் துயிலும் மையம்,
மின்சார தகனமிடம்,
பொகனஹள்ளி சாலை,
கருபேசன ஹள்ளி,
பனத்தூர்,
பெங்களூர் – 560 103
……..
Panathur Cremation Centre, Electric Crematorium
Bhoganahalli Road, Kadubeesanahalli, Panathur, Kadubeesanahalli, Panathur, Bengaluru, Karnataka 560103
https://goo.gl/maps/gyBCzHtcSrD2
……….
குறிப்பு : தென்மொழியாரின் படத்திறப்பு நினைவேந்தல் கோவையில் நடைபெறும் தேதி, இடம், நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.