ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை இணைக்கும் நோக்கோடு இயங்கி வரும் உலகத் தமிழர் பேரவையின் முகநூல், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் உணர்ச்சிபூர்வமாக பதிவிடுகிறோம் என்ற வகையில் சட்டத்திற்கு புறம்பான செய்திகளை பதிவிட வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கிறோம்.
இன்றைக்கு சமூக வலைகளில் உங்கள் பதிவுகள் அடையாளம் தெரியாத பலரால், நகலெடுக்கப்பட்டு பிற தளங்களில் மீள் பதிவேற்றம் செய்யப்படலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சில நேரங்களில் அவ்வகை பதிவுகள் உங்களுக்கு எதிரான பாதகங்களை ஏற்படுத்தி விடுமோ என்கிற நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே இந்த அறிக்கையை உலகத் தமிழர் பேரவை விடுக்கிறது.
பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் என்பனவற்றைத் தாண்டி, சட்டத்திற்கு புறம்பாக பதிவிட்டு அதன் மூலம் வரும் சாதக, பாதகங்களுக்கு உலகத் தமிழர் பேரவை எவ்வகையிலும் பொறுப்பேற்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இதை வேண்டுகோளாக எடுத்துக் கொண்டு ஒத்துழைப்பை தர வேண்டுகிறோம்.
இது முழுக்க முழுக்க தமிழ் இனத்தின் மீதுள்ள அக்கறையால் வெளியிடப்படும் அறிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டுகிறோம்.
நன்றி
ஒருங்கிணைப்பாளர், உலகத் தமிழர் பேரவை.