“தமிழ் இனத்திற்காகவும், மொழிக்காகவும் தங்களது இன்னுயிரை ஈகை செய்த மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவோம்” – உலகத் தமிழர் பேரவையின் மாவீரர் நாள் அறிக்கை!

"தமிழ் இனத்திற்காகவும், மொழிக்காகவும் தங்களது இன்னுயிரை ஈகை செய்த மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவோம்" - உலகத் தமிழர் பேரவையின் மாவீரர் நாள் அறிக்கை!

“தமிழ் இனத்திற்காகவும், மொழிக்காகவும் தங்களது இன்னுயிரை ஈகை செய்த மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவோம்” – உலகத் தமிழர் பேரவையின் மாவீரர் நாள் அறிக்கை!

ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில மாதம் நவம்பர் (கார்த்திகை) 27ம் நாளில், தங்களது மொழியான தமிழ் மொழிக்காகவும், தமிழினத்தையும் பாதுகாக்கும் பொருட்டு உயிரை துச்சமென கருதி ஈகம் செய்து, எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் அந்த மாவீரர்களுக்கும், நமது தமிழ் உலகம் நினைவு கூர்ந்து, மதிப்பளிக்கும் சிறப்புமிக்க நாளாக கொண்டாடி வணங்கும் திருநாள்தான் இந்த நாள்.

தமிழ் மொழி உரிமைக்காகவும், இன மீட்புக்காகவும், மக்கள் சுதந்திரமாக தன்மானத்தோடு வாழ வேண்டும் எனற இலட்சியத்திற்காக மடிந்த எமது தமிழ் வீர மறவர்களை, எமது நெஞ்சப் பசுமையில் நிறுத்திக் கொள்ளும் ஒரு தேசிய நாள்தான் கார்த்திகை 27. அப்படிப்பட்ட அந்த மாவீரர்கள். என்றென்றும் பூசிக்கப்பட வேண்டியவர்கள். எப்பொழுதும் நினைவில் நிறுத்தி வைத்து போற்றப்பட வேண்டியவர்கள்.

"தமிழ் இனத்திற்காகவும், மொழிக்காகவும் தங்களது இன்னுயிரை ஈகை செய்த மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவோம்" - உலகத் தமிழர் பேரவையின் மாவீரர் நாள் அறிக்கை!

“தமிழ் இனத்திற்காகவும், மொழிக்காகவும் தங்களது இன்னுயிரை ஈகை செய்த மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவோம்” – உலகத் தமிழர் பேரவையின் மாவீரர் நாள் அறிக்கை!

அந்த மாவீரர்கள் நமது தமிழினத்திற்கு மொத்தமும் சொந்தமானவர்கள். அவர்கள் தமிழ்த் தேசியத்தின் சொத்துக்கள்.

எனவே எமது மாவீரர்களுக்கு உண்மையான வீர வணக்கம் செலுத்தப்பட வேண்டும் என்றால், தமிழினத்தில் உள்ள அனைவரும் அமைதியாகவும், எளிமையாகவும், உங்கள் வீடுகளிலும் கூட வழிபாடு நடத்திட வேண்டும்.

எமது உலகத் தமிழர் பேரவை இந்நிகழ்ச்சியை திரு. அரு. கோபால் (ஆசிரியர், ஏழுகதிர்) அவர்களது தலைமையில், சென்னையில் உள்ள தொடர்பு அலுவலகத்தில் காலை 11 மணியளவில், 27ம் தேதி நவம்பர் மாதம், கீழ்கண்ட முகவரியில் வீர வணக்கம் செலுத்துகிறது.

உலகத் தமிழர் பேரவை (World Tamil Forum)
29, பிரிசிசன் பிளாசா,
397, அண்ணா சாலை, தேனாம்பேட்டை,
சென்னை – 600 018

அதுபோல், உலகத் தமிழர் பேரவையின் மதுரை மாவட்ட கிளை, தமிழ் வளர்த்த மதுரையில், 15, சோனையார் கோயில் தெரு, (நோயாஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கு எதிர்புரம்), நாரிமேடு, மதுரை – என்ற முகவரியில் பேரவையில் மதுரை பொறுப்பாளர் திரு. நமச்சிவாயம் தலைமையில் நடத்துகிறது.

இந்நிகழ்ச்சியில் உங்கள் அனைவரையும் பங்கெடுத்துக் கொண்டு தமிழ் மறவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: