ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவர்களின் நிலையை உயர்த்த நினைக்கும் தமிழக முதல்வர், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவார்?

தேதி : 09-09-2021

உலகத் தமிழர் பேரவையின் அறிக்கை

ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவர்களின் நிலையை உயர்த்த நினைக்கும் தமிழக முதல்வர், இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன நிவாரணம் வழங்குவார்?

ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவர்களின் வாழ் நிலை உயர வேண்டும், அவர்களுக்கு சமூக நீதி வழங்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இருக்க இடமில்லை. ஆனால், இச்சலுகையை தவறாக பயன்படுத்தி பொய்யான வழக்கில் சிக்க வைக்கப்பட்ட மாற்று சாதியினருக்கு இழைக்கப்படும் அநீதிக்கு நிவாரணம் வழங்க இன்றைய முதல்வர் முன்வருவாரா என்பதாக மாற்று சாதியினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தமிழக முதல்வர் நேற்றைய (08-09-2021) சட்ட மன்றத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்காக பல சலுகைகளை வழங்க வேண்டும் என்ற அறிவிப்புகளை வெளியிட்டார். இன்றைய காலத்திற்கேற்ற நிலையை கருத்தில் கொண்டு பார்த்தோமேயானால், பல்வேறு முரண்பட்ட செய்திகள் இந்த அறிவிப்பில் உள்ளதை கவனத்தில் கொள்ள முடிகிறது.

ஒடுக்கப்பட்ட பட்டியலின மக்களுக்கு பல தசாப்தங்களாக சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறதை யாரும் மறுக்க மாட்டார்கள். இந்தியா சுதந்திரம் பெறும் முன்பே, ஆதாவது 1927-லேயே சமூக அரசிதழின் அறிக்கையையும், 1935-லேயே சிறுபான்மையினத்தினருக்கும் (அன்றைய காலகட்டத்தில், சிறுபான்மையினத்தினரும் பட்டியலின சாதியை சார்ந்தாரே என்பது குறிப்பிடத்தக்கது) சலுகைகள் அளிக்கப்பட்டதை பார்க்க முடிகிறது.

சலுகைகளினால் பட்டியலின மக்கள் அனைத்து தளங்களிலும், மத்திய மாநில அரசு பதவிகளில் உயர்ந்த நிலையிலும், நீதித்துறையில் உயர் நிலையிலும் இன்னும் பிற அனைத்து துறைகளிலும் உயர்ந்த நிலையிலும் உள்ளார்கள் என்பது கண்கூடாக காணக்கூடியது.

இதுவரை பட்டியலின சாதி மக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளினால், பிற்படுத்தப்பட்ட மற்றும் உயர் வகுப்பினர் என சொல்லக் கூடிய சாதி மக்களின் நிலையை பார்த்தால், பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பதும் உண்மையே. இதனால், இன்றைய காலகட்டத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் உயர் வகுப்பினரின் வாழ் நிலை கீழ் நோக்கி பயணப்பதை பார்க்க கூடியதாக இருக்கிறது.

ஆனால் சலுகைகளை கணக்கில் கொண்டும் பார்தோமேயானால், இந்திய சுதந்திரத்திற்கு பிறகு அரசியல் கட்சிகளினால் வழக்கப்படும் சலுகைகள் பெரும்பாலும் ஓட்டு வங்கியை குறி வைத்து கொண்டு, பட்டியலின பாதுகாப்பு என சொல்லியும் சட்ட திருத்தங்களை சாதகமாக்கி ஓட்டுகளை பெறும் நோக்கோடே செயல்பட்டு வந்திருக்கிறது என்பது மறுக்க முடியாத ஒன்று.

அவ்வகையில், பிசிஆர் எனப்படும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பெரும்பாலும் பொய்யான வழக்குகள் பதியபட்டு, கொடுஞ் சிறைகளில் அடைக்கப்பட்டும், ஆனால், வழக்கின் இறுதி தீர்ப்பில் பாதிக்கப்பட்ட உயர் சாதியினர் என்பவர்கள் எவ்வித முகாந்திரமுமில்லாமல் விடுதலையும் செய்யப்பட்டுள்ளனர் என பல வழக்குகளை பார்த்தாலே தெளிவாக தெரியும். இப்படி பாதிக்கப்பட்டு அப்பாவியான அவர்களில் விடுதலை பெற்றவர்களுக்கு எவ்வித நிவாரணங்கள் கொடுக்கப்படுவதில்லை. அப்பாவியான இவர்கள் சிறை கொடுமைகளை அனுபவித்ததுதான் மிச்சம்.

அதுபோல், மற்றொரு சலுகையாக ரூ. 10 லட்சம் பரிசை சாதி வேறுபாடுகளற்ற மயானங்களை கடைபிடிக்கும் கிராமங்களுக்கு கொடுக்கப்படும் என முதல்வர் தெரிவிக்கிறார்.

இந்த அறிவிப்புகளின்படி, உலகத் தமிழர் பேரவை சில பரிந்துரைகளை தமிழக அரசிற்கு வழங்க எண்ணுகிறது:

1. மதங்களையும் கடந்து மயானங்கள் பயன்படுத்துவோருக்கு பண பரிசு வழங்கப்படும் என்ற அறிவிப்பை முதல்வர் வெளியிடுவாரா என்பதை நாம் உட்பட அனைவரும் எதிர்பார்க்கிறோம்.

2. மற்றொன்று, தமிழகத்தில் இச்சலுகைகளை அதிகமான பெறுவோர், தமிழரல்லாதார்தான் என்ற உண்மையை உணர்ந்து, பிறப்பால் தமிழர்களுக்கு மட்டும்தான் இச்சலுகைகள் பொருந்தும் என்ற நிலைப்பாட்டை எடுக்கப்பட வேண்டும்.

தமிழக முதல்வர் சும்மா வெறுமனே, ஓட்டு வங்கியை பெற பட்டியலின சலுகைகளை அறிவிக்கிறாரா? என்பதை நாம் வருங்கால செயற்பாட்டுகளை மூலமே வரையறுக்க இயலும். காலம் தரும் பதிலுக்காக நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

நன்றி

இப்படிக்கு
உலகத் தமிழர் பேரவை – க்காக

(அக்னி சுப்ரமணியம் – தலைவர்)

PAGE - 1

PAGE - 2

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: