உண்மைத் தமிழர்களே விழித்துக் கொள்ளுங்கள்!!!
கருஞ்சட்டை பேரணி என்ற பெயரில் தமிழரல்லாதாரான திராவிடர்கள் தமிழ் தேசியத்தைக் கண்டு, அச்சமடைந்து ஒன்று சேருவதையே காட்டுகிறது இந்த பேரணி. பெரும்பாலும் தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள் தான் தங்களை திராவிட முகமுடிக்குள் மறைத்து காத்துக் கொண்டு வருகின்றனர். நாளை பெரியாரின் நினைவு தினம் நிகழவுள்ளதை முன்னிட்டு, பாஜக அரசுக்கு எதிராக இந்த பேரணி நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும், தமிழ் தேசியத்தை குறி வைத்தே இப்பேரணி நடத்தப்பட்டதாக அந்த கூட்டத்தில் வெளிப்படையாகக் காணக் கூடியதாக இருந்தது.
[உலக பொதுமறை தந்த ஐயன் திருவள்ளுவனும், 2,000 வருடத்திற்கு பின் தமிழன் உரிமை பெற போராடிய தமிழின தேசியத் தலைவர் பிரபாகரனும் – தமிழினத்தின் துரோகியான தமிழரல்லாத பெரியாரருக்கு பின்னராம். வடுக திராவிடத்தின் சூழ்ச்சி இன்னும் மாறவில்லை!]
பெரியார் ஈ.வே.ராமசாமி நாயக்கர் மொழியால் தமிழரல்லாதவர். இவர் காலத்தில் தமிழகத்தில் தலைமை வகித்தபோது ஒருசிலவற்றில் தமிழர்கள் நன்மையடைந்ததை நாம் மறுக்கவில்லை. ஆனால், இவரால் தமிழ் இனத்திற்கும், தமிழ் மொழிக்கும் பெருமளவு பின்னடைவே அதிகம் என்பதை மறக்கலாகாது. ஆதலால், தமிழர்கள் இவரை முழுமையாக ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர்.
நீண்ட நெடுஞ்காலமாக தனித் தனியே செயல்பட்டு வந்த தமிழகத்தில் உள்ள திராவிட இயக்கத் தலைமைகள் இன்று தங்களது பகையை மறந்து ஒன்று சேர்ந்து, இந்த பேரணியை நடத்தியுள்ளனர். இந்த பேரணியை முன்னின்று நடத்திய முக்கிய திராவிட தலைமைகள் மாற்று மொழியினர்தான் என்பதை கீழே காணலாம் …
- திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி (தெலுங்கு யாதவர்)
- திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி (கௌடா இனத்தைச் சேர்ந்த கன்னடர்), விடுதலை ராசேந்திரன் (தெலுங்கர்)
- தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் (தெலுங்கு நாயுடு),
- ஆதித் தமிழர் பேரவையின் தலைவர் அதியமான் (தெலுங்கு அருந்தியர்)
- விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன் (தெலுங்கர்),
- மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் தோழர் வாலாசா வல்லவன் (தெலுங்கர்)
- தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் டைசன் (மலையாளி),
- மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி (மலையாளி என சொல்லப்படுகிறது)
இவர்களைத் தவிர கலந்து கொண்ட பல்வேறு இயக்கத்தைச் சேர்ந்வர்கள் பெரும்பாலும் மாற்று மொழியினரே. வழக்குறைஞர் அருள் மொழி, தோழர் சுப.வீ போன்ற சில தமிழ் அடிபொடிகள் சுயலாபம் கருதி தங்களையும் அங்கமாக இவர்களோடு காட்டிக் கொண்டனர்.
பேரணியில் இறுதியில் ‘தமிழின உரிமை மீட்பு மாநாட்டை’ இந்த தமிழரல்லாதோர் நடத்த முடிவு செய்ததுதான் 2018ம் ஆண்டின் சிறந்த நகைச்சுவை.
தமிழ் தேசியம் பேசும் எங்களைப் போன்றவர்கள் கடவுள் மறுப்பாளர்களே. தமிழின விரோத இந்திய தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரசை ஏற்றுக் கொள்ளாதவர்களே.
ஆனால், இந்த போலி ‘தமிழின உரிமை மீட்பு மாநாட்டை’ நடத்தும் தமிழரல்லாதாரான திராவிடர்கள் பாஜக -வை எதிர்ப்பார்களாம் – ஆனால், ஈழத்திலும் தமிழகத்திலும் தமிழர்கள் மீது மறைமுக தாக்குதல்களை மேற்கொண்ட காங்கிரசுக்கு ஆதரவளிக்கும் திராவிட கட்சிகளுக்கு துணை போவார்களாம். என்ன ஒரு வேடம். இனியும் தமிழர்களை ஏமாற்ற இந்த திராவிட வேடதாரிகளால் இயலாது என்பதை இவர்கள் புரிந்து கொள்ளும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதை உலகத் தமிழர் பேரவை கோடிட்டு சுட்டிக் காட்டுகிறது.